Wednesday, 26 September 2007

சிங்கைத் தமிழ் இலக்கிய முன்னோடி


"சிங்கைத் தமிழ் இலக்கிய முன்னோடி" சி.ந. சதாசிவ பண்டிதர் டாக்டர் சுப. திண்ணப்பன் சிங்கப்பூரை மையமாக வைத்துச் சிங்கப்புனுர் மண்ணின் மணம்கமழச் சிங்கப்புனுர்ப் பின்னணியில் எழுதப்படும் இலக்கியமே சிங்கைத்தமிழ் இலக்கியம் ஆகும். இந்த வகையில் சிங்கப்புனுரில் கோயில் கெ¡ண்டெழுந்தருளியுள்ள சுப்பிரமணிய சுவாமி எனப்படும் முருகப்பெருமானைத் தலைவனாகக் கொண்டு அவர் மீது பாடப்பெற்ற சிங்கை நகர் அந்தாதி, சித்திர கவிகள் என்னும் இரண்டு இலக்கியநூல்களை கி.பி.1887-இல் இயற்றிய யாழ்ப்பாணம் வண்ணைநகர் சி.ந.சதாசிவ பண்டிதர் பற்றியும், அவர் இயற்றிய இரண்டு நூல்கள் பற்றியும் ஓரளவு விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். சிங்கை நகர் அந்தாதி, சித்திர கவிகள் என்னும் இரண்டு நூல்களும் சிங்கப்புனுர் சி.கு. மகுதூம் சாயபு அவர்களுக்குச் சொந்தமாகிய தீனோதயவேந்திர சாலையில் அச்சிடப்பட்டன. சர்வஜித் வருடம் சித்திரை மாதம் (ஏப்ரல் 1887) வெளிவந்ததாக இப்புத்தக அட்டை கூறுகின்றது. இந்த இரண்டு நூல்களே சிங்கப்புனுரின் முதல் தமிழ் நூல்கள் என்பது சிங்கைத்தமிழ் இலக்கிய ஆய்வாளர்களின் கருத்து. (திருநாவுக்கரசு.வை:1985, கோவிந்தசாமி.நா:1979). மேலும் மலேசியத்தமிழ் இலக்கிய வரலாற்றை நோக்கும்போது சிங்கப்புனுரில் தான் முதல் தமிழ் இலக்கியம் உருவாயிற்று என்று இந்த இரண்டு நூல்களையும் குறிப்பிட்டுப் பாராட்டுகிறார் முனைவர் இரா. தண்டாயுதம். எனவே இந்த இரண்டு நூல்களையும் இயற்றிய சி.ந.சதாசிவ பண்டிதரே சிங்கைத் தமிழ் இலக்கி¢ய முன்னோடி எனக் குறிப்பிடுவதில் தவறு இல்லை. பின்னணி கி.பி. 1819-இல் ராபிள்ஸ் பெருமகனாருடன் சிங்கப்புனுருக்கு வந்த தமிழர் நாராயணப்பிள்ளையும் அவருடன் வந்த தமிழர்களும் சிங்கப்புனுரில் சாலைகளும் பல கட்டிடங்களும் தோன்றக் காரணமாக இருந்தார்கள். தொழிலாளர், மெய்க்காப்பாளர், போர்வீரர் என்ற நிலையில் பணியாற்றிய அவர்களுக்கு வழிபடும் இடமாகச் செளத் பிரிட்ஜ் ரோடு மாரியம்மன் கோயில் கி.பி.1828-இல் கட்டப்பட்டது. பிறகு படிப்படியாகச் சிங்கப்புனுருக்குத் தமிழர்கள் தென்னிந்தியப்பகுதியிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வரத் தலைப்பட்டனர். இவர்கள் வருகைக்குக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சார்ந்த ஆங்கிலேயர்களே காரணமாக இருந்தனர். தமிழகத்திலிருந்து- தென்னிந்தியப்பகுதியிலிருந்து வந்தவர்கள¢ல் பெரும்பாலோர் படிப்பறிவு இல்லாத தொழிலாளர் நிலையிலும், இலங்கையிலிருந்து வந்தவர்கள் ஓரளவு கல்வித்தகுதி பெற்று ஆசிரியர், எழுத்தர் ஆகிய நிலையிலும் பணியாற்றினர். கி.பி. 1867- க்கு முன் இலங்கைத் தமிழர் யாரும் சிங்கப்புனுரில் இருந்ததற்கு வரலாற்றுச் சான்றில்லை என்றும், அதன் பிறகுதான் அரசாங்க அலுவல்களில் பணியாற்ற இங்கு வந்தனர் என்றும், அவர்களில் மிகுதியானோர் இந்துக்கள் என்றும் ஓர் ஆய்வு கூறுகிறது(யோகினி யோகராஜா,1981) 1875 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைத் தமிழர் பிரித்தானிய ஆட்சியாரின் வேண்டுகோளுக்கு இணங்கி அரசாங்க அலுவல்களில் அமர்ந்து கடமையாற்றுவதற்காகச் சிங்கப்புனுருக்கும் மலாயாவுக்கும் வந்து கொண்டிருந்தனர் என்று சிங்கப்புனுர்ச் செண்பக விநாயகர் ஆலய மகாகும்பாபிஷேக மலர் (1983) கூறுகின்றது. தென்னிந்தியாவிலிருந்து வந்த தமிழர்களில் இராமநாதபுரம் மாவட்டம் செட்டிநாடு பகுதியைச் சேர்ந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் தங்களுக்குரி¢ய வங்கித் தொழிலை - கொடுத்து வாங்கும் தொழிலை நடத்தச் சிங்கப்புனுருக்கு 1838 இல் குடியேறியதாக மலேயாவின் தோற்றம் என்னும் வரலாற்று நூலைத் தம¢ழில் எழுதிய சுங்குரும்பை பெ.நா.மு. முத்துப்பழநியப்பச் செட்டியார் கருதுகிறார்(1938).நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு என்னும் நூலை எழுதிய அ.இராமநாதன் செட்டியார் பாய்மரக்கப்பலில் 1824 ஆம் ஆண்டு சட்டியார்கள் பினாங்கிற்கும் சிங்கப்புனுருக்கும் வர்த்தகம் செய்ய வந்ததாகக் குறிப்பிடுகிறார். இவர்களின் வர்த்தக சங்கம் சிங்கப்புனுரில் 1928 முதல் இயங்கி வருகிறது. செட்டியார்கள் தங்கள் தொழிலை ம¡ர்க்கெட் ஸ்திரீட்டில் சிறப்பாக நடத்தி வந்தனர். இவர்கள் டேங்க் ரோட்டிலுள்ள தண்டாயுதபாணி கே¡யிலை 1859-இல் கட்டி வழிபட்டனர். 4-4-1859-இல் இக்கோயில் கட்டப்பட்டதாக இக்கோயிலிலுள்ள கல்வெட்டுக் கூறுகின்றது. இந்தக்கோயிலில் கருவறை நாயகராகிய தண்டாயுதபாணி எனப்படும் சுப்பிரமணிய சுவாமியையே இலங்கையிலிருந்து வந்த யாழ்ப்பாணம் சி.ந.சதாசிவ பண்டிதர் தம் சிங்கை நகர் அந்தாதி, சித்திர கவிகள் என்னும் நூல்களில் பாட்டுடைத்தலைவனாக வைத்துப் பாடியுள்ளார். இதனை வை.திருநாவுக்கரசு, நா.கோவிந்தசாமி முதலியோரும் உடன்பட்டுத் தம் கட்டுரைகளில் எழுதி உள்ளனர். மேலும் இந்நூல்களை அச்சிட்ட அச்சக உரிமையாளர் மகுதூம் சாயபு ஆசிரியராக இருந்து நடத்திய சிங்கை நேசன் இதழில் வெளியிட்ட 1888 ஆம் ஆண்டு தைப்புனுச நிகழ்ச்சி பற்றிய விரிவான செய்தி¢யில் டேங்க் ரோடு தண்டாயுதப¡ணி சுப்பிரமணிய சுவாமி என்றே கட்டுரை முழுதும் குறிப்பிடப்படுகிறார். எனவே அமுந்நாளில் சுப்பிரமணிய சுவாமி என அழைக்கப்பட்ட இறைவன் சிங்கப்புனுர் டேங்க் ரோடு கோயில் தண்டாயுதபாணியே என உணரலாம். முத்தமிழ்க் கடவுளாகிய முருகனைப் பற்றியே சிங்கையின் முதல் தமிழ் இலக்கிய நூல்கள் அமைந்துள்ளதை நினைக்க நினைக்க வியப்பு மேலிடுகிறது. இருப்பினும் Tank என்பதைக் குறிக்கும் குளம் ஒன்று தண்டாயுதபாணி கோயிலுக்கு அருகில் இருந்த செய்தி பற்றி இந்நூல்களில் நேரடியாகக் குறிப்புகள் இல்லை. ஒரு பாடலில் “இக்குள சிங்கை காக்கும் குக முருகா (88)”என்னும் தொடரும் இன்னொரு பாடலில் “சிங்கை வாவியின் வாய்க் குமுதம் (தாமரை) வல்லியை (தாமரைக்கொடிகளை) மலரவைக்கும் இளமதி (87)” என்று வரும் தொடரும் குளம் பற்றிய குறிப்புகளாகக் கொள்ள இடமுண்டு என்பதை உணர்த்துகின்றன. மேலும் இந்தக் கோயிலுக்கும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களுக்குமிருந்த தொடர்பையும் பண்டிதர் எங்கும் குறிப்பிடவில்லை. ஒரு பாடலில் (44) முருகனையே “சிங்கை வ¡ணிகனே” என்று அழைக்கிறார். முருகனைச் செட்டி என்றே அழைக்கிறது சுந்தரர் தேவாரம். மேலும் இக்கோயிலிலுள்ள இறைவனைத் தண்டாயுதபாணி என்றே அழைப்பர் செட்டியார்கள். இதனைக் குறிக்கும் வகையில் இரண்டு பாடல்களில் (26,27) “ சிங்கை வேல்வரு பாணியனே” என்னும் தொடர் இடம் பற்றுள்ளது. இவற்றை எல்லாம் வைத்து நோக்கத் தேங் ரோடு தண்டாயுதபாணியையே இந்நூல்கள் சுப்பிரமண¢ய சுவாமி என அழைத்துப் பாடுகின்றன எனலாம். சதாசிவபண்டிதர் யாழ்ப்பாணம் வண்ணை நகர் சி.ந.சதாசிவ பண்டிதர் அவர்களால் இயற்றப்பட்ட வண்ணை அந்தாதி, வண்ணை நகரூஞ்சல், சிங்கை நகர் அந்தாதி, சித்திரகவிகள் என்னும் தொகுப்பு நூலட்டை முகப்புக் குறிப்பும், இந்நூல்களும், இந்நூல்களுக்குச் சிறப்புப் பாயிரமாகச் சிதம்பரம் அப்பியாச மடத்தலைவராகிய ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமிகள் இயற்றிய நிலை மண்டில ஆசிரியப்பாவும், சிங்கை நகர் அந்தாதியில் பண்டிதரே பாடிய ஆக்கியோன் பெயர், அவையடக்கம் ஆகியனவும், வண்ணையந்தாதியில் பண்டிதர் பாடிய ஆசிரிய வணக்கச்செய்யுளும் வண்ணை அந்தாதியில் காணப்படும் யாழ்ப்பாணம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகப்பெருமான் அவர்கள் மாணாக்கரும் மருமகரும் வித்வ சிரோன்மணியாகிய ஸ்ரீமத் ந.ச.பொன்னம்பலம்பிள்ளை அவர்களுடைய மாணாக்கருள் ஒருவராகிய ஸ்ரீமத் வி. செல்லையர் அவர்கள் சொல்லிய வெண்பாக்கள் இரண்டும் சதாசிவ பண்டிதர் வாழ்க்கை பற்றிய செய்திகளை அறிய உதவுகின்றன. அவை வருமாறு: 1. இலங்கை எனப்படும் ஈழத்தைச் சார்ந்த வட பகுதியிலுள்ள வண்ணை மாநகரில் (வண்ணார் பண்ணை) வாழ்ந்தவர். 2. இலக்கண இலக்கியப்புலமை உடையவர். 3. ஆழமான அற¢வாற்றல் உடையவர். 4. பொருளாழமிக்க சொல்லாற்றல் மிக்கவர். 5. இறைவனை வணங்கும் ஒழுக்க சீலர். 6. சான்றோர்களை நண்பர்களாகக் கொண்டவர். 7. தமிழில் ச¢றந்த சொற்பொழிவாளர். 8. வண்ணை நகர¢லுள்ள காமாட்சி அம்மை ஆலயத்திற்கு வழிபாடு செய்யப் புனுசை செய்பவர்களை அழைத்துப் பெரும் பொருட்செலவில் கும்பாபிஷேகம் செய்தவர். 9. காமாட்சி அம்மை மீது அந்தாதி, ஊஞ்சல், எச்சரிக்கை, பராக்கு, மங்களம் ஆகிய ஐந்து கவிதைப் பகுதிகள் அடங்கிய நூல் இயற்றியவர். 10. சிங்கைச் சுப்பிரமணியராகிய முருகப்பெருமான் மீது அந்தாதி, சித்திர கவிகள் இயற்றியவர். 11. அமர அரி அண்ணல் என்பவரிடம் முத்தமிழ்க் கலை பயின்றவர். 12. தேவார திருவாசகப் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 13. சைவ சித்த¡ந்த சாத்திரக் கருத்துகளில் நல்ல புலமை உடையவர். 14. அவையடக்கம் மிக்கவர். 15. நாற்கவியும் இயற்றும் புலமை பெற்றவர். 16. ஆசை மேலீட்டினாலும் ஆகமப் பொருளைச் சொல்லும் விருப்பத்தாலும் நூல்களை இயற்றியவர். சி.ந.சதாசிவ பண்டிதர் சிங்கைக்கு வந்து இந்நூல்களை இங்கேயே அச்சியற்றி வெளியிட்டுள்ளார். இதனை இந்நூல் தொகுப்பிற்குரிய அறிவிப்புப் பகுதியில் சிங்கப்புனுர் சர்வஜித்து வருடம் சித்திரை மாதம் என்று வருடம் மாதம் குறிப்பிட்டுக் கையொப்பமிட்டுள்ளதால் அறியலாம். மேலும் சிங்கை நகர் அந்தாதியின் சுப்பிரமணியா உனை நம்பி வந்தேன், மனத்துயர் மாற்றி வைப்பாய் திணியா வளம் தரும் சிங்கை வேலவ (3), முருக - உன் புனுங்கழலை இங்கு ஆதரவு எனக் கொண்டேன், இனி எனக்கு ஏன் பயமே? (7), பயமே பொருந்திப் பதைக்கும் நெஞ்சே (8), வெளிப்பட வாழும் என் ஆவியக் காக்கின்ற வேலுடையாய்(30), யான் புகழ்ந்து நின்றே உனைத் தொழ வந்தருள்வாய்(34), மங்கையர் தம்மை மணந்திடினும் சிவமறையாவும் தெரிந்திடினும் உன் அடிக்கீழ் வந்து உறங்குவனே(35), நமன் என்னை நாடிவரின் அசையாதிருக்க அருள் தருவாய் (41) ஆகிய பாடல் அடிகள் பண்டிதர் சிங்கை வந்திருந்த சய்தியும், குடியேற்ற நாடுகளில் ஏற்படும் அச்சவுணர்வும், ஆண்டவனை நம்பி வேண்டுதலும் புலப்படுத்துகின்றன. மேலும் “இல்லாளும் வைவள், இனம் வையும், ஈன்ற என் அன்னையுடன் எல்லாரும் வைவர், பொருள் அவர்க்கு ஈய எற்கு இல்லை என்கில்” (46), எனக்கூறி ”வல்லையில் வந்து வளம்தா வயஞ்சிங்கை வாணிகனே”(44) என வேண்டி நிற்கும் இவர் இறுதியில் (பாடல் 90) ”துணை எனக்கு உண்டு முருகா நினது சுடர்வடிவேல் இணை எனக்கு இல்லை இனிமேல் உனை என் இருதயத்தில் கணை வீழ் பொழுதும் மறவேன்” (90) என்று கூறும் கூற்றிலிருந்து இவர் சிங்கைக்குப் பொருள் தேடி வந்த நிலை பற்றியும் அதனை ஓரளவு பெற்ற ந¢லை பற்றியும் அறியமுடிகிறது. மேலும் மகுதூம் சாயுபு நடத்திய சிங்கை நேசன் இதழ்களிலும் இவர் செய்திகள், கட்டுரைகள் எழுதி இருக்க வேண்டும் என்று ஊகிக்க இடனுண்டு. 1888 சிங்கை நேசன் இதழில் தைப்புனுச விழா பற்றிய செய்திக்கட்டுரயை படித்துப் பார்த்தால் இவர் அதனை எழுதி இருக்கக்கூடுமோ என எண்ணத்தோன்றுகிறது. சிங்கை நகர் அந்தாதி நூலமைப்பு அந்தாதி என்பது ஓர் இலக்கிய வகை. அந்தம் என்றால் முடிவு, இறுதி. ஆதி என்றால் முதல், தொடக்கம். அந்தாதி என்றால் ஒரு பாடலின் இறுதியிலுள்ள அடியோ, சீரோ, அசையோ, எழுத்தோ, அடுத்த பாடலுக்கு முதலாக வருமாறு அமைத்துப் பாடுவது. ஒரு நூலின் இறுதிப்பாடலின் முடிவு முதற்பாட்டின் தொடக்கமாக அமையுமாறு மாலை போலத் தொடுத்து முடிப்பது அந்தாதி. இம்முறையால் மனப்பாடம் செய்யவும், பாடவும், நினைவில் வைத்துக்கொள்ளவும் பாடல் வரிசை மாறாமல் அமையவும். நூலை மாலை போல இணைக்கவும் முடிகின்றது. இது தொல்காப்பியர் கூறும் இயைபுத் தொடையில் அமையும். அந்தம் முதலைத் தொடுப்பது அந்தாதி என யாப்பருங்கலக்காரிகை அந்தாதியை ஒரு தொடையாகக்கருதி இலக்கணம் கூறுகிறது. அந்தாதி நூலாக அமைவதற்குரிய இலக்கணத்தைப் பன்னிருபாட்டியல் பகர்கின்றது. “ வெண்பா கலித்துறை வேண்டிய பொருளில் பண்பாய் உரைப்பது அந்தாதித் தொகை” என்பது அது கூறும் இலக்கணம். அந்தாதி நூலாக அமையும் போது வெண்பா அல்லது கட்டளைக் கலித்துறை என்னும் பாவகையினால் அமைய வேண்டும். அந்தாதித்தொடை அமைப்பு சங்க இலக்கியங்களில் பதிற்றுப்பத்து நான்காம் பத்துப் பகுதியில் காணப்பட்டாலும் அந்தாதி ஓர் இலக்கிய வகையாக வளர்ந்தது கி.பி.ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டிற்குப் பிறகுத¡ன். காரைக்கால் அம்மையார் பாடிய அற்புதத்திருவந்தாதி தான் முதன் முதலில் தோன்றிய அந்தாதி நுறுலாகும். இது சிவபெருமானைப் பற்றியது. இது பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளது. இதனைத் தவிர அத்தொகுப்பில் சேரமான் பெருமாள் நாயனார் பாடிய பொன்வண்ணத்தந்தாதி, நக்கீரர் பாடிய கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி, நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகிய நூல்களும் உள்ளன. திருத்தொண்டர் திருவந்தாதி, பரிய புராணத்திற்கு உறுதுணையாக இருந்த நூல். இது அடியார்களைப் பற்றியது. ஏனைய இரண்டும் சிவ பெருமானைப் பற்றியது. இவ்வாறே நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் முதலாழ்வார் மூவரும் பாடிய தனித்தனி அந்தாதிகள், திருமழிசையாழ்வார் பாடிய திருவந்தாதி முதலிய நூல்களும் உள்ளன. இவை திருமால் பற்றியவை. கம்பர் பாடிய சடகோபர் அந்தாதி, சரசுபதி அந்தாதி முதலிய நூல்களும் உள்ளன. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடிய அந்தாதி நூல்களும் உள்ளன. அருணகிரியார் முருகனைப் பற்றிக் கந்தரந்தாதி என்னும் நூல் இயற்றியுள்ளார். அபிராம பட்டர் திருக்கடவுனுர் அபிராமி அம்மையைப் பற்றி (சக்தியைப் பற்றி)எழுதிய அபிராமி அந்தாதி புகழ்மிக்க அந்தாதிகளில் ஒன்று. சிங்கயில் இப்போது வெண்பாச் சிற்பி இக்குவனம் அந்தாதிப்பாடல்கள் பாடுவதில் வல்லவர் ஆக இருக்கிறார். அந்தாதி இலக்கியம் என்பது தமிழுக்கே உரிய இலக்கிய வகைகளில் ஒன்று. பிற மொழிகளில் இவ்வகை இலக்கியம் இருப்பதாகத் தெரியவில்லை. சிங்கை நகர் அந்தாதி 100 பாடல்களும் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பு வடிவத்தில் அமைந்துள்ளது. இதனை நூலாசிரியராகிய பண்டிதரே தம் அவையடக்கச் செய்யுளிலும், ஆக்கியோன் பெயர் கூறும் செய்யுள¢லும் குறிப்பிடுகின்றார்.(வெள்ளைக்கலித்துறை, கட்டளை நூறு கலித்துறை). அந்தாதி இலக்கியம் வெண்பாவில் அல்லது கட்டளைக் கலித்துறையில் பாடலாம் என்பது விதி. வண்ணையந்தாதியை வெண்பா யாப்பில் பாடிவிட்டதால் சிங்கை நகர் அந்தாதியைக் கட்டளைக் கலித்துறை யாப்பில் பண்டிதர் இயற்றியுள்ளார் என இதற்குக் காரணம் கூறலாம். எந்தவகைச் செய்யுளும் இயற்றும் வல்லமை பெற்றவர் பண்டிதர் என்பதனை அவரது சித்திர கவிகள் என்னும் நூல் மெய்ப்பிக்கும். கட்டளைக் கலித்துறை என்பது பாவகையில் எழுத்தெண்ணிக்கை அடிப்படையில் இயற்றப்படுவது. ஓர் அடிக்கு ஐந்து சீர்கள். அவற்றில் முதலடிச்சீர் நான்கும் வெண்பாச் சீர்களான தேமா, புளிமா, விளச்சீர், காய்ச்சீர் வர வேண்டும். அடியின் கடைசிச்சீர் விளத்தில் காய்ச்சீர் ஆன அதாவது கருவிளங்காய். கூவிளங்காய்ச் சீரில் ஏகாரத்தில் முடிய வேண்டும். இப்படி வந்தால் ஒற்று நீங்க நேரசையில் 16 எழுத்துகளும் நிரயசையில் 17 எழுத்துகளும் வரும். இதுவே கட்டளைக் கலித்துறைக்கு இலக்கணம். இந்த வகையில் சிங்கை நகர் அந்தாதியிலுள்ள 100 பாடல்களில் 52 பாடல்கள் நேரசையில் தொடங்கி அடிதோறும் 16 எழுத்துக்களைக் கொண்டவையாக உள்ளன. 48 பாடல்கள் நிரை அசையில் தொடங்கி அடிதோறும் 17 எழுத்துக்களைக் கொண்டு விளங்குகின்றன. இவையனைத்தும் நான்கு அடிப்பாடல்கள். ஏகாரத்தில் முடிவன. இவை எதுகை மோனை நயமிக்கு ஓசை நயம் சிறந்து விளங்கும் பாடல்களாகவும் உள்ளன. அந்தாதி நோக்கில் பார்த்தால் 100 பாடல்களில் 84 பாடல்கள் அவற்றிற்கு முந்தியுள்ள பாடல்களின் ஈற்றுச்சீர்களையே தொடக்கமாகக் கொண்டுள்ளன. 14 பாடல்கள் முந்திய பாடல்களின் ஈற்றுச் சொற்களை முதலாகக் கொண்டுள்ளன. 2 பாடல்கள் (11,14) முந்திய பாடல்களின் ஈற்றசையை முதலாகக் கொண்டு வருகின்றன. 100 ஆவது பாடல் புனுமகளே என முடிகின்றது. முதலாவது பாட்டில் புனுமகள் மூவரும் என்று தொடங்குகிறது. இவ்வாறு மண்டலித்து வரும் நிலையினை இங்கு காணுகிறோம். இந்த 100 பாடல்களை நூல் என்னும் தலைப்பில் அந்தாதியில் பார்க்கிறோம். இதற்கு முன் காப்பு என்னும் தலைப்பில் விநாயக வணக்கம் நூற்பயன், அவையடக்கம், ஆக்கியோன் பெயர் என நான்கு வெண்பாக்கள் உள்ளன. விநாயக வணக்கம் உலகெலாம் என்று தொடங்குகிறது. சேக்கிழார் பாடிய பெரிய புராணத்திற்குத் த¢ல்லை நடராசப் பெருமான் உலகெலாம் என அடியெடுத்துக் கொடுத்தான் என்பது வரலாறு. பெரிய புராணம், கம்பராமாயணம், திருமுருகாற்றுப்படை முதலிய நூல்கள் உலகம் எனத் தொடங்குகின்றன. உலகம் என்பது மங்கலச்சொல். எனவே சைவப் பெரியாராகிய பண்டிதர் இந்த அந்தாதியைத் தொடங்குவதற்குப் பெரிய புராணத்தைப் பின்பற்றியும் ஏனைய இலக்கிய மரபு தழுவியும் மங்கலச்சொல் என்னும் இலக்கண மரபு தழுவியும் உலகெலாம் என்னும் சொல்லைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். நூற்பயன் கூறும்போது ஆசிரியர், சிங்கை நகர் அந்தாதியைச் சிந்தையில் வைத்துப் போற்றுபவர்கள் மங்கலமாக எந்நாளும் வாழ்வார் என்று கூறி இந்நூல் முத்தி தரும். பத்தி தரும், மும்மலத்தை ஓட்டும், அருட்சத்தி தரும், சண்முகனைச் சார்விக்கும், சித்தி தரும் என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு கூறுவது இந்நூலைப் பலரும் படிக்கத் தூண்டும் முயற்சியாகும். திருஞான சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்களில் த¢ருக்கடைக்காப்புச் செய்யுள்களில் இம்முறை உள்ளதை அறிந்த பண்டிதர் தம் நூலுக்கும் நூற்பயன் கூறியுள்ள¡ர் எனலாம். அவையடக்கப் பாடலில் ''கற்றவர்க்கு முன்னே கருது ஆகமப் பொருள்களைத் தெற்றென விளங்கச் செப்புவனோ'' எனத் தன்னடக்கத்துடன் கூறிக் கொள்கிறார் பண்டிதர். வெள்ளைக் கலித்துறை என்று தம் பாடல்களை வெள்ளைப்பாட்டு என்றும் கூறிக்கொள்கிறார். மேலும் நான்கு நூல்களுக்கும் சேர்த்து அறிவிப்பு என்னும் பகுதியில் “இலக்கண இலக்கிய வித்துவான்களுக்கும் மற்றையனைவோர்களுக்கும் மிக மரியாதையுடன் அறிவ¢ப்பது யாதெனில் என் ஆசைமேலீட்டினால் இப்பிரபந்தங்களை ------- துணிந்து வெளிப்படுத்தினேன். ஆயினும் எங்கேனும் இலக்கண இலக்கிய சந்தேக விபரீதங்கள் காணப்படுமேல் தாங்கள் தயை கூர்ந்து தனிக்கடித மூலமாய் அடியேற்கு நேராய் அறிவிப்பீராயின் மறுமுறை திருத்தி வெளிப்படுத்தக் காத்திருக்கின்றேன்” என்று உரைநடையில் எழுதிவிட்டு ஒரு பாடலில் குற்றமே காண்பவர் குறுமாமுனியாகிய அகத்தியர் பாடலிலும் குற்றம் காண்பர். கற்றிலாத என் கவி குற்றமுடையதாய¢னும் ஆராய்ந்து பெரியோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். இந்த இரண்டு பகுதிகளும் (அவையடக்கம், அறிவிப்பு) ஆக்கியவரின் தன்னடக்கத்தைப் புலப்படுத்துகின்றன. ஆக்கியோன் பெயர்ப்பாடலில் சிங்கை நகர் முருகன் சேவடியை 100 கட்டளைக் கலித்துறையால் பாடப்பட்ட இந்நூலை இயற்றியவர் ஈழப்பதியான் சதாச¢வப் பண்டிதனே என்று குறிப்பிடுகிறார். நூலின் இறுதியில் திருநாவுக்கரசரின் 4 ஆம் திருமுறைத் தேவாரப்பாடல்கள் (காஞ்சி-கச்சி ஏகம்பம் பற்றிய) மூன்று பாடல்களும் சுந்தரர் தேவாரப் பாடல் ஒன்றும் (7ஆம் திருமுறை திருக்கச்சி ஏகம்பம் பற்றியது) தரப்பட்டுள்ளன. இப்பாடல்களில் பண்டிதர்க்கு இருந்த ஈடுபாடு நமக்குத் தெரிகிறது. நூல் கூறும் பாட்டுடைத் தலைவன் சிங்கை நகர் அந்தாதி, சித்திரகவிகள் இரண்டும் சுப்பிரமணிய சுவாமி எனப்படும் முருகப் பெருமானையே பாட்டுடைத் தலைவனாகக் கொண்டுள்ளன. சிங்கை நகர் அந்தாதி காட்டும் முருகப் பெருமான் பற்றிய செய்திகளைச் சிறிது பார்க்கலாம். 1. முருகப் பெருமானுக்குரிய பெயர்களில் வேலன் என்பது 15 பாடல்களிலும் (4,8,9,10,25,30,36,38,47,60,68,69,73,77,94), முருகன் என்பது ஒன்பது பாடல்களிலும் (16,56,62,64,70,81,88,90,91), சண்முகன் என்பது மூன்று பாடல்களிலும் (28,29,75), ஆறுமுகன் என்பது இரண்டு பாடல்களிலும்(41,65), சுப்பிரமணியன் என்பது இரண்டு பாடல்களிலும் (3,52), சிவசுப்பிரமணியன் என்பது இரண்டு பாடல்களிலும் (7,65), குகன் என்பது நான்கு பாடல்களிலும் (50,88,89,95), கந்தன் என்பது ஒரு பாடலிலும்(15), இடம் பெறக் காணலாம். 2. முருகனைச் சிவபெருமானின் புதல்வனாகவும் (7,33,83), சக்தியின் மகனாகவும்(7,93), விநாயகர் தம்பியாகவும்(12,40), திருமால் மருகனாகவும் (2,74), வள்ளி கணவனாகவும்(14,33,84), உறவு நிலை காட்டிக் கூறுகின்ற இடங்களும் உள்ளன. 3. சிவபெருமானுக்குப் பிரணவ மந்திரப் பொருளை உபதேசித்ததால் சிவகுரு நாதனாக இருக்கின்ற நிலயையும் இந்நூல் நான்கு பாடல்களில் சுட்டுகிறது(1,3,4,71). 4, முருகன் மலையில் உறையும் கடவுள் என்பதைக் காட்டும் தொடர்களாகக் குன்றவன் (32), வெற்பன்(93), குறிஞ்சிக்க¢ழவன் (33) என்னும் தொடர்கள் வந்துள்ளன. 5. முருகனை மயில் வாகனன் (8,13,72,79) ஆகவும், சேவற்கொடி (61) கொண்டவனாகவும் சித்திரிக்கிறது(31). 6. முருகன் சூரனைக் காய்ந்தவன் (49), குன்றம் எறிந்தவன் என்னும் புராணச் செய்திகளும் உள்ளன. 7. முருகனை இறைவனாகக் கொண்டு இறைத் தன்மைக்கேற்ற அரசனாகவும் (6,12,24,31,43,48,78), காவலனாகவும் (35), இறைவனாகவும் (5), ஐயனாகவும் (53), நாயகனாகவும் (19,22), அதிபதியாகவும் (63), புனிதனாகவும் (85), உத்தமனாகவும் (58), சுத்தன¡கவும் (46), நிர்மலனாகவும் (34,58), பசுபதி(66), ஆகவும், தேவு(54), ஆகவும் ஆசிரியர் அழைத்துள்ளார். 8. முருகன் என்னும் சொல்லுக்கு அழகு, இளமை, மாறாமணம், தெய்வத்தன்மை எனப் பொருள் கூறுவர். அதற்கேற்ப இந்நூலும் முருகனின் இளமை(13) பற்றியும், சுந்தரத்தன்மை (53) பற்றியும், வசீகரத்தன்மை பற்றியும் (96) கூறும். 9. முருகனைக் குருவாய் வருவாய் என அழைக்கிறார் அருணகிரியார். இந்நூலாசிரியரும் முருகனைக் குரு என அழைப்பதுடன் தேசிகன் (19,51) என இரண்டிடங்களில் குறித்துள்ளார். 10. முருகனைக் கலாநிதி(21) என்றும், வாணிகன் என்றும் (44), புலவன் (100) என்றும் அழைக்கின்ற போக்கும் இந்நூலில் இடம்பெற்றுள்ள புதிய போக்குகள். பொதுவாக இங்கு முருகனைப் பற்றியுள்ள செய்திகள் பெரும்பாலும் இலக்கிய, புராண மரபுவழிச் செய்த¢களே எனலாம். சிங்காபுரந் திகழ் தேவே! சிவசுப்பிரமணிய முருக! கருதரிய கங்கா தனைய! கதிர்வேல் முருக! கருதரிய பொங்கு ஆடு அரவன் புதல்வா! பொலியும் உன்புனுங்கழலை இங்கு ஆதரவு எனக்கொண்டேன் இனிஎனக்கு ஏன்பயமே! (7) என்னும் பாடலில் முருகப் பெருமானின் பல நிலைகள் ஒரு சேரக் கூறப்பட்டுள்ளன. நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம், ஏமாப்போம்,பிணியறியோம், இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை என்னும் திருநாவுக்கரசர் தேவாரக் கருத்தையும் இதனோடு இணைத்துப் பார்க்கலாம். நூல் காட்டும் சிங்கை சிங்கை நகர் அந்தாதியிலுள்ள 100 பாடல்களிலும் சிங்க பற்றிய பெயர்க்குறிப்பு உள்ளது. 100 பாடல்கள் 6,7,48,49(4),55 ஆகிய ஐந்து பாடல்களில்தான் சிங்காபுரம் என்னும் பெயர் உள்ளது. இவற்றில் 49வது பாடலில் நான்கு இடங்களில் சிங்காபுரம் என்னும் பெயர் வந்துள்ளது. ஏனைய இடங்களில் எல்லாம் சிங்கை என்றே உள்ளது. மேலும் சிங்கையுனுர் (24) என ஒரு பாடலிலும் சிங்கைத்தலம் (75) என ஒரு பாடலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கை என்பது நகர் என்னும் சொல்லை முன்னே பெற்று ஒரு பாடலிலும் (1) பின்னே பெற்று மூன்று பாடல்களிலும் (2,20,37) வரக் காண்கிறோம். எனவே மிகுதியான ப¡டல்களில் சிங்கை என்றே குறிக்கப்படும் நிலை உள்ளது. எனவே சிங்கப்புனுர் ஒரு நகர்நாடு city state என்னும் நிலையில் இருப்பதை இக்குறிப்புகள் உணர்த்துகின்றன. மேலும் சிங்காபுரம் என்னும் குறிப்பு சிலப்பதிக¡ரத்தில் காணப்படும் சிங்கபுரம் என்னும் குறிப்பினை நினைவுனுட்டி இப்பெயருக்குரிய தமிழ்ச்சாயலை- இந்திய உறவினை எடுத்துக் கூற வழி வகுக்கிறது எனக் கூறலாம். சிங்கை மாநிலம் (77) என்று ஒரு பாடலில் வரும் தொடர் சிங்கை (state) நாடு என்பதைக் குறிக்கின்றது. சிங்கை நகர் அந்தாதி சித்திரிக்கும் சிங்கை பற்றிய செய்திகள் வருமாறு: 1. கடல் சூழ்ந்த ஒரு தீவு(கரை பொரு வ¡ர்கடல் சூழ் தருவார் சிங்கை(35), செழுஞ்சிங்கைத் தீவு (28) ) 2. ïÀÕ¿¨, ¶ÿ»ÕÀ¨ ÉÀý࣠ÂÔÆÕ§ ÂÁ£ Âç£ »Öé(95) 3. தென்னை மரங்களும் சோலகளும் கரும்பும் மிக்க இடம்(14,17,21,27) 4. முறைவளர் தோப்பும், முகில் வளர் குன்றும், முதிரும் நல்ல துறைவளர் தெப்பமும், தூண் வளர் மாடமும், தூயசதுர் மறைவளர் வேலன் வலஞ்சிங்கை வாவி-அல்லி மலர் மிக்க குளம்(87) - இயற்கை வளம் 5. குதிரைகள் பாயும் தெருக்கள் (20) (தேசிகன் பாயும் தெரு) 6. அரச நகர் (85) (புனுரியமாகிய சிங்கை) 7. பேரொலி - (கோலாகலம¢க்க சிங்கை (18) ) 8. வாணிகம் ஓங்கி வளர் சிங்கை (45) 9. சுகம் தரும் சிங்கை (39) 10. சேமம் தரும் சிங்கை (54) 11. புதுநகர் சிங்கை (1) 12. பழமையான நாடு(11) (பழஞ்சிங்கை) 13. அழிவில்லாத நாடு (94) (கடில் சிங்கை) 14. திக்கெட்டும் புகழ் சிங்க (50) புகழ்ச் சிங்கை (16) தலம் புகழ் சிங்கை (76) ஊரார் புகழும் சிங்கை (25) 15. வளமிக்க நாடு (திணியா வளம்தரு சிங்கை (3) சீமளம் மேவிய சிங்கை(19) வளம் (9,32,78,441) 16. வளர்கின்ற நாடு (வளர் சிங்கை (80,951) 17. வெற்றி மிக்க நாடு (வலம் சிங்கை (87) விறல் சிங்கை(46) 18. வேதமறையோர் போற்றும் சிறப்பு-பக்தி உணர்வு மிக்க நாடு(10),(74) ஆதவர் போற்றும் அருஞ்சிங்கை(10) வேதியர் மறச் சிங்கை 19. அழகுடன் விளங்கும் நாடு (பொலியும் சிங்கை) 20. பொன்வளம், செல்வச்சிறப்பு (சீமலி மேவிய சிங்கை (9) கனமே வளர் தெங்கு (16) நூல் உணர்த்தும் பக்தி பக்தி என்பது இறைவனை நம்பி வழிபடுவதாகும். மனத்தால் இறைவனை நினைத்து, வாயால் அவன் திருப்பெயர்களையும், புகழையும் கூறி, உடலால் அவனுக்கு உரிய பணிகளைச் செய்து அன்பு செலுத்துவதாகும். வழிபாட்டுக்கு - பக்திக்கு முதன்மைத் தேவை இறை நம்பிக்கை. மனக்கவலையை மாற்றுவதும் வ¢னை தீர்ப்பதும் பக்தியின் பயனாகும். இதனைச் சிங்கை நகரந்தாதியின் மூன்றாம் பாடல்'தணியா வினையைத் தணிப்பாய், சரவணத் தாமரையில் அணியா ஔ¢ரும் அயில்வேல் அரச!அருளும் சுப்ரமணியா!உனை நம்பி வந்தேன், மனத்துயர் மாற்றி வைப்பாய், திணியா வளந்தரும் சிங்கையின் வேல!சிவகுருவே!'என்னும் பாடல் விளக்குகிறது. இறைவழிபாட்டில் ஈடுபடுதற்கும் இறையருள் தேவை என்பதை 'அவனருளால் அவன்தாள் வணங்கி' என்று திருவாசகம் வலியுறுத்துகிறது. இங்குப் பண்டிதரும் முருகனிடம் " உனைத் தொழ என்றும் பணித்தருள்வாய்" (18) என்று வேண்டுகிறார். இறைவழிபாடு - பக்தி ஒருமுகப்பட ஒரு தெய்வ வழிபாடு முக்கியம். இதனை இந்நூலாசிரியர் 'பல தய்வம் உண்டெனப் பன்னிடும் பேயர்' (17) என்று கூறி வலியுறுத்துகிறார். 'மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொழுபவர்க்கு வார்த்தை சொல ஒரு சற்குரு வாய்க்கும்' என்பது த¡யுமானவர் வாக்கு. இதனைப் பண்டிதர் சிங்கை அந்தாதியில் " எல்லையில் வேள்வி விரதமும் தீர்த்தம் எழில் தருமம் சொல்லிய புண்ணியம் புனுசைகள் ஆற்றின் தொடர்பவங்கள் இல்லவை ஆக்கல் எளிதோ மருவி இயல்குருவாய் வல்லையில் வந்து வளந்தா வயம்சிங்கை வாணிகனே!" (44) என்று கூறுவதைக் காணலாம். பக்தர்கள் இறைவன் திருவடியைக் கண்டு அதன் இன்பத்தில் திளைப்பது மரபு. 'சேவடி கொண்டு எனைக் காத்தருள் சிங்கை நகர்ப் புனித'(2).'துயர்க்குத் தக்க மருந்து உன் அடியிணைத் தாமரை என்று அறிந்தேன்'(50). 'இறையடிப் பட்டுச் சிரசினில் என்தன் இருவினையும் கறையடிப் பட்டுக் கரந்திடும்'(6) என்றும் பண்டிதர் முருகன் திருவடி பற்றிக் கூறுகிறார். முருகன் திருவடிபட்டு அயன் கையெழுத்து அழிந்தது எனக் கந்தரலங்காரத்தில் வரும் அருணகிரியார் பாட்டும் இங்கு நினைக்கத்தக்கது. இறைவனின் திருப்பெயரைச் சிந்தித்தலும், வாயால் ஓதுதலும் பக்தியின் ஒரு கூறாகிய அருச்சனை எனக் கருதப்படும். அஞ்சும் முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சல்என் வேல்தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன் என்பது நக்கீரர் பாட்டு. இதனைப் பண்டிதர் "முருகா எனில் பிணி காய்ந்திடுமே" என்றும் சுருக்கமாக ஒரு பாடலில்(59) கூறுகிறார். 'குகனே சடாட்சரம் (சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரம்) அன்றோ உடம்பு உனக்கு என்று அறிந்தேன்'(51) என்னும் அடிகளின் வாயிலாக சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திர வடிவமாக முருகன் இருக்கிறான் என்பதைக் கூறுகின்றார். பின்வரும் நான்கு பாடல்களும் தமிழ் அருச்சனைப் பாடல்கள் போல அமைந்துள்ளன. பிரியா தவ நம! சீலா நம! குரு பீட நம! துரியா நம! சிவாய நம! தூய நம! துயரை அரியா நம! எனை ஆளா நம! சிங்கை அந்தணஆ தரியா நம! ஆறெழுத்தே நம! நம தாரகமே!(92) தாரா சரணம்! தனிவேல் சரணம்! தமிழ் நிலத்தைப் பேரா சரணம்! பிதாவே சரணம்! பிறப்பை எல்லாம் தீரா சரணம்! சிவமே சரணம்! வண்சிங்கை வெற்பின் வீரா சரணம்! விமலா சரணம்! வினை அழியே!(93) அழியாய் அடைக்கலம்! ஐயா அடைக்கலம்! ஐங்கருணை விழியாய் அடைக்கலம்! வேலா அடைக்கலம்! மெய்ப்பொருளின் கிழியாய் அடைக்கலம்! கேதா அடைக்கலம்! கேடில்சிங்கை உழியாய் அடைக்கலம்! ஓம்ஓம் அடைக்கலம் உத்தமனே(94) உத்தம போற்றி! உயர்குக போற்றி! ஒழுங்குதரு வித்தக போற்றி! வியாபக போற்றி! விகாரமிலாத் தத்துவ போற்றி! சராசர போற்றி! சரவணப வத்துவ போற்றி! வளர்சிங்கை ஞான வளத்தவனே!(95) இவ்வாறு முருகனை அருச்சித்து 'ஞானவளப்பம் தருவாய் நயந்து நனை அருளின் பானம் தருவாய்' என்று முருகனை வேண்டுகிறார் ஆசிரியர்(96). முருகனைச் சிந்திக்க உடற்பிணி அகலும் எனவும் ஏனைய வளங்கள் கிடைக்கும் எனவும் அந்தாதியின் இறுதிப் பாடல்கள் உரைக்கின்றன. சாரும் வினையால் வரும் கயரோகம், சலம், இழிவு தீரும், வலியும் செறிகுன்மம் ஓடும்; சிரப்பிளவை பேரும் இலைனெப் பின்னிடும்; பேதிப் பிசாசு அகலும் சேரும் சிறப்பு திகழ் சிங்கை வேலனைச் சிந்திக்கவே(98) சிந்திக்க வித்தைத் திறம்வரும்; சிங்கைத் திருவுடையாய் வந்திக்க வாழ்வின் வலம்வரும்; மக்கள் மனை பெருகும் சந்திக்க ஞானநிலை வரும்; சற்குணம் சார்ந்து வரும் பந்திக்க ஐக்யபலம் வரும் உன்றன் பதத்தினையே(99) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை முதற்பாடலும், கல்வி, வெற்றி, மக்கள், வீடு, ஞானம், நற்குணம், மன ஒருமை முதலிய ஏனைய பேறுகளையும் பக்தி தரும் என்பதை இரண்டாம் பாடலும் எடுத்துரைக்கின்றன. சிங்கை நகர் அந்தாதியின் நூற்பயன்களில் ஒன்று பத்தி என்பதை, 'முத்திதரும், பத்திதரும், மும்மலத்தை ஓட்டும் அருட் சத்திதரும், சண்முகனைச் சார்விக்கும்-சித்திதரும் சிங்கைநகர் அந்தாதி சிந்தையிலே வைப்போர்கள் மங்களமோடு எங்கணும் வாழ்வார்' என்று வரும் நூற்பயன் வெண்பா கூறுவதற்கேற்ப இந்நூலில் பக்திச்சுவை பல இடங்களில் அமைந்திருக்கக் க¡ணலாம். நூல் கூறும் தத்துவம் தமிழ் கூறும் பக்தி நூல்கள் தமிழர்தம் தத்துவ நோக்கிற்குத் தலையாய எடுத்துக்காட்டுகளாக உள்ளன. சைவத்திருமுறை நூல்களை மையமாகக் கொண்டே சைவ சித்தாந்தம் என்னும் தமிழர் கண்ட தத்துவம் உருவாயிற்று. சித்தாந்தம் என்னும் சொல்லிலுள்ள சித் என்பது அறிவு எனப் பொருள்படும். அறிவை மையமாகக் கொண்டு எழுந்த தத்துவம் சைவ சித்தாந்தம். அறிவு மயமாகத் தானே அறிகின்ற பாருள் இறை (பதி) என்றும், அறிவித்தால் அன்றி அறிய முடியாத பொருள்களை உயிர்(பசு) என்றும், அறிவித்தாலும் அறிய இயலாத பொருள்களைத் தளை(பாசம்) என்றும் வகைப்படுத்தி இவை மூன்றும் என்றும் உள்ள பொருள்கள் என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது. உயிர்கள் தளை நீங்கி இறைவனை அடைவதே முத்தி வீடுபேறு என்றும் அது கூறும். இதனை விளக்கும் தமிழ் நூல்கள் மெய்கண்ட சாத்திரம் எனப்படும். இத்தத்துவத்தின் பெருமையைத் திராவிடர்களின் கூர்த்த மதி நுட்பத்தின் விளைவு என்று ஜி. யு. போப் பாராட்டுகிறார். இந்தச் சைவ சித்தாந்த தத்துவத்தின் கூறுகளை எல்லாம் சிங்கை நகர் அந்தாதி சிறப்பாக விளக்குகிறது. கற்றவர்க்கு முன்னே கருது ஆகமப் பொருள்களை தெற்றெனவே விள்ள இதைச் செப்புகிறேன் என்று பண்டிதர் அவையடக்கச் செய்யுளில் ஆகமத் தத்துவத்தை உணர்த்தவே இந்நூல் எழுதியதாகக் குறிப்பிடுகின்றார். இந்து சமய நூல்களில் வேதம் என்பது ஆரியர் தந்தது என்றும், ஆகமம் என்பது திராவிடர் வகுத்தது என்றும் கூறுவர். வேதத்தினால் விளைந்த தத்துவம் வேதாந்தம் எனப்படும். அத்வைதம் என்றும் இதற்குப்பெயர். இதற்கு மாறாக எழுந்தது சைவ சித்தாந்தம். இதற்கு அடிப்படை ஆகமம் என்பர். இந்த இரண்டு தத்துவத்துக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாட்டைப் பண்டிதர், அதுநான் எனும் மறை ஆகமம் நீ அது ஆணவ என்னும் பொதுவாய் இரண்டும் சரிஎன ஞானி இயம்புவதை இதுவேறு அதுவேறு எனக்குஅறை ஞானி இயம்புவதை றதுவேல் விடுத்து அழி முன்சிங்கை காக்கும் முறையவனே(86) என்று கூறிச் சைவசித்தாந்த தத்துவத்தின்பால் தமக்கிருக்கும் ஆழமான பற்றைப் பண்டிதர் வெளிப்படுத்துகிறார். இறைவனே நான் எனக்கூறும் வேதாந்தம், நீ இறைவன் ஆவதற்கு உரியை எனக்கூறும் சித்தாந்தம். இதுவே இரண்டிற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்பதை இப்பாடல் காட்டுகிறது. இதுஅது என்றும் எனது உனது என்றும் இயம்பும் எல்லாம் மதுமிக உண்டவன் வாசகமே என்று மாமறையின் முதுமொழி சிங்கை முருகா தெரித்திடு முத்தமிழின் பொதுநலம் தந்தருள் போதா புராண நற்புனுரணனே(81) என்னும் பாடலில் சைவ சித்தாந்தத்தத்துவத்தைப் பண்டிதர் முத்தமிழின் பொது நலம் என்று பாராட்டுகிற¡ர். சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கையாகிய முப்பொருள் உண்மையை, பசுபதி பாசம் அனாதி என நூல் பகர்ந்தவற்றுள் பசுபதி பாசம் அனாதி செயற்கைப் பயன்தருவாய் (67) என்று ஆசிரியர் கூறுகிறார். இங்கு நூல் என்பது திருமந்திரத்தைக் குறிக்கிறது. இறைவன் இயல்பை, புனுரணன், உற்பவம் இல்லான் நிதமும் பொலிந்திடுவன் காரணம் மூன்று பத்தாறும் கடப்பன், கதி பெயராத் தாரணன் சூக்குமன் தாழான், உயரான் தனிவெளிகால் சீரண காலத்தினும் திகழ் வேல் சிங்கை சேர்பவனே (82) என்னும் பாடல் உணர்த்துகிறது. இறைவன் படைத்தில், காத்தில், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தெ¡ழில் செய்பவன் என்னும் சித்தாந்தக் கருத்தை ஒரு பாடல்(25) உணர்த்துகிறது. இறைவன் சித்துரு(அறிவு வடிவம்) என்பதையும் ஒரு பாடல் (21) கூறுகிறது. ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலத்தால் கட்டுண்டிருக்கும் தன்மை உடையவை உயிர்கள் என்னும் சித்தாந்தக்கருத்தையும் பல இடங்களில் இந்நூல் கூறுகிறது(78). நிலையாமைக் கருத்தையும் 'மன்னவராயினும் மாய்வது நிச்சயம் வாழ்வது பொய்' (79) என்னும் பாடல் அடி உணர்த்துகிறது. சாக்கிரம், சொப்பனம் என்னும் நனவுந¢லை, கனவு நிலை பற்றியும் இந்நூலில் செய்திகள் உள்ளன(36). ஆணவத்தைக் காரிருள் என்றும், சூரனை ஆணவத்தின் வடிவம் என்றும் பண்டிதர் காட்டுகிறார்(12). கன்மம் ஆகிய வினை மூவகைப்படும் என்பதை மன்னுயிர்ச் சஞ்சிதம் நோக்கான் மறையும் மலத்துருந்தி தன்னுடன் போகும் பிரார்த்தம், தற்பரம் ஞானமதால் துன்னும் ஆகாமியம் தோன்றாது அகலும் இச்சூழ்ச்சியினை இன்னும் அருளாதிருக்குதியே சிங்கை எல்லையனே (43) என்று கூறும் பாடல் தெளிவுபடுத்துகிறது. தன் மரபில் இறந்தவர்களை வணங்குவது பாச தருமம் என்றும், சோலை, குளம் முதலியன பண்புடன் உருவாக்க¢க் கொடுப்பது பசு தருமம் என்றும், இறைவனை வணங்குவதே சிவதன்மம் என்றும் மூவகையாகத் தருமங்களைப் ப¡குபடுத்தி நூல்கள் கூறும் எனக் குறிப்பிடுகிறது ஒரு பாடல்(47). இந்த மூவகைத் தருமங்களையும் செய்து கன்மங்கள் நீக்கிக் கருணை கொண்டு ஆடிக் கசிந்துருகி இறைவனைத் தொழுதால் இன்பப் பேறு கிடைக்கும் என்று பண்டிதர் கூறுகிறார்(48). இறைவனை அடையச் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று நான்கு வழிகளைக் கூறும் சைவசித்தாந்தம். இதனை சரியையில் தத்துவம் மூன்று பத்தாறையும் தள்ளி, அப்பால் கிரியையில் தன்னைப் பிரியாது, அருவின் கிளர் வடிவாய்த் தெரியையில் போதம் ஒழிப்பது யோகம் திருவருளும் கரையையின் ஞானம் தரும் சிங்கைகாக்கும் கதிபதியே(63) என்னும் பாடலில் பண்டிதர் தெளிவுபடுத்துகிறார். 'கங்குல் மலம் அழி காட்சி உன் தோற்றக்கருணை அன்றோ?' என்று ஒரு பாடல் இறைவன் கருணையால் மலமழ¢யும்(53) இயல்பையும் விளக்கும். யானையின் துதிக்கையும், மூக்கும் சேர்ந்திருப்பது போலவும் பசுவின்பாலும் தண்ணீரும் கலந்திருப்பது போலவும் இறைவனுடன் இணைந்திருக்கும் முத்தி அத்துவித இயல்பை உரைத்தருள வண்டும் என்றும் (55) இறைவனிடம் பண்டிதர் வேண்டுகிறார். இவ்வாறு தமிழர் கண்ட தனிப்பெரும் தத்துவமாகிய சைவ சித்தாந்தக்கருத்துக்களைச் சிங்கை நகர் அந்தாதிச் செய்யுட்களில் காணலாம். நூலில் இலக்கியம் குறிக்கோளை-இலக்கினை இயம்புவதுதான் இலக்கியம் என்பது தமிழர்களின் இலக்கியக் கொள்கை. அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே என்று இதனை நன்னூல் எடுத்து இயம்புடக¢றது. அதன் அடிப்படையில் சிங்கை நகர் அந்தாதியின் நோக்கமாகப்- பயனாக ஆசிரியர் குறிப்பிடுவன. 1. முத்தி தருவது. 2. ½¢»Õ »çÂâ 3. மும்மலத்தை ஓட்டுவது 4. அருட்சத்தி தருவது 5. சண்முகனை அடையச்செய்வது 6. சித்தி தருவது 7. எங்கும் மங்களமோடு வாழ்வது இந்த ஏழுவகைப் பயனைப் பற்றியும், பயன் பெறும் வழிகளைப் பற்றியும் நூலாசிரியர் நன்கு பாடியுள்ளார் என்றே கூறலாம். இலக்கியக் கூறுகள் உணர்ச்சி,கற்பனை,வடிவம்,உணர்த்தும் கருத்து, உரைக்கும் அழகு (அணி அழகு) எனக் கூறுவர். சிங்கை நகர் அந்தாதியின் பல செய்யுட்கள் பக்தி உணர்வை வெளிப்படுத்தும் பாங்கின எனக் கூறலாம். பக்தி எனும் பகுதியில் விளக்கிய பல பாடல்கள் இதற்குச் சான்றாக உள்ளன. அரியவனே உனைநம்பாதவர்க்கு, உனை அண்டினவர்க்கு உரியவனே, உமைமந்தா! அரிஅயற்கு அண்மையதாய்ப் பெரியவனே! முருகேசா! உனைத்தொழும் பெற்றியர்க்குப் பிரியவனே! சிங்கை வேலா! உனையான் பிரிகிலனே(91) என்று இந்நூலின் இறுதிப் பகுதியில் வரும் பாடலும் ஏனைய பாடல்களும் பக்திச்சுவைக்கு எடுத்துக்காட்டுக்களாக உள்ளன. தமிழர்கள் கண்ட சுவை பக்திச்சுவை. இதனை இலக்கியப்பாடல்கள், இசைப்பாடல்கள், ஏனையகலைகள் வாயிலாக வெளிப்படுத்தித் தமிழையே பக்தி மொழியாக்கியவர்கள் அல்லவா தமிழர்கள்! எனவே அத்தகைய பக்திச்சுவையே மேலோங்கி இருக்குமாறு ஆசிரியர் இந்நூலைப் படைத்துள்ளார் எனல¡ம். கற்பனைக்குச் சிங்கை வாவியின் (குளத்தின்) வாய்க்குமுதம் இறைவளர் வல்லி இதையான் மலர்த்தும் இளமதியே(பாடல் 86) என்னும் அடித்தொடரைச் சான்றாகக் கூறலாம்(87). மதிக்கின்ற போதமாகிய குரங்கினை விட்டுமறந்திடநீ விதிக்கின்ற போது அந்தக் குரங்கே மனத்தில் ஏறி வந்து குதிக்கின்றது என்றுகூறி அந்தக்குரங்கை ஞானவேலால் எறிந்து ஓட்ட வேண்டும் என்னும் பண்டிதரின் பாடல் மற்றொரு கற்பனைக்குச் சான்றாகும்(88). கற்பனை இந்நுறுலில் மிகுதியாக இல்லை. சிங்கை நகர் அந்தாதி உரைக்கும் கருத்து முருக வழிபாடு என்பதனை முன்னர்க் கண்டோம். இதன் வாயில¡கத் தோத்திர உணர்வும், சாத்திரக் கருத்தும் தென்படுமாறு நூலை ஆக்கியுள்ளார் ஆசிரியர். இந்த அந்தாதியின் வடிவம்-யாப்புப் பற்றி முன்னர் எடுத்துரைக்கப்பட்டது. சிங்கை நகர் அந்தாதியிலுள்ள அணியழகு பற்றிப் பார்க்கலாம். அணிகளில் சிறந்தது உவமை அணி. சேவகத்து எங்கும் சிறக்கும் வளர்சிங்கைச் சேய்அடியைப் பாவகத்துள் வைத்துப்பாட நினைக்கின்ற பான்மையது புனுவகத்துள்ள கடல்நீர் அளத்தலும், போர்க்களத்தில் சேவகத்து அம்பு எய்தல் கையிலி மானும் சிறப்பு இதுவே(80) என்னும் பாடலில் முருகன் திருவடி பாடுதற்கரியது என்னும் கருத்தை விளக்குகிறார். பாட நினைப்பதே கடல்நீர் அளப்பதைப் போன்றது என்றும், போர்க்களத்தில் கையில்லாத சேவகன் அம்பு எய்வதை ஒத்தது என்றும் கூறுகிறார். இறைவன் திருவடி ஞானத்தைக் கண்டவர்கள் திறத்தைப் பேசுவது என்பதும் ககனத்தைக் காற்படியால் வீரியம் பேசி அளப்பது போன்றது என்கிறார். விண்ணைக் காற்படி என்னும் அளவால் அளக்க முடியும¡? அது போலத் திருவருள் ஞானம் பெற்ற திறமும் அளக்க முடியாது. வேசிகள் போல மறைத்திடும் தத்துவவேடம் எல்லாம் (20) என்று பரத்தையர் இயல்பு கூறும் உவமை ஒன்றும் உண்டு. மலத்தில் சிக்கித்திகைக்கின்ற உயிர்களுக்கு வலையில்பட்ட பறவைகளை உவமையாகக் கூறுகிறார்(50). ஆணவத்தால் மாதவத்தோர் செய்யும் செய்கை எல்லாம் காற்றை நெருப்பால் சுடுதலுக்கும், ஆகாயத்தை அதிலிருந்து வரும் மழை நீரால் கழுவுதற்கும் ஒப்பாகும்(61) என்று ஒரு பாடலில் கூறுகிறார். 'கற்றாவின் மனம் போலக் கசிந்து உருக வேண்டுவனே' என்னும் திருவாசக உவமையை 'கன்றே பசுவினைத் தேடுதல் போலக் கரைபவர்க்கே'(34) என்று ஆசிரியர் கையாண்டுள்ளார். உவமைக்கு அடுத்த நிலையில் வருவது உருவக அணி. உத்தம! நீ கடல், என் உயிர் அப்பு அதில் உப்பு, அலந்து அத்திய கன்மம் வளி, அலை போதம் தகும் என்று இறைவனைக் கடலாகவும், உயிரை உப்பாகவும், வினையை சூறாவளிக் காற்றாகவும், அறிவை அலையாகவும் உருவகித்துக் கூறுகிறது இப்பாடல்(58). முருகனை' விரும்பும் கருணை விளக்கு' (21) எனக் கூறுவது ஒரு நல்ல உருவகமாகும். இவ்வாறே நெஞ்சக்கனகல் என்னும் அருணகிரியார¢ன் கந்தரனுபுனுதியில் வரும் உருவகத்தை உன் திருவடியைக் 'கன்மயமாகிய என் மனத்தே வைத்தேன்' (38) என்று கையாளுகிறார் ஆசிரியர். முரண் அணிக்கு ஓர் எடுத்துக்காட்டாக ஐந்தாவது பாடல் வருகிறது. இலையே உறவும், இலையே துறவும், இயற்புகழும் இலையே- எனினும் இருக்கும் என் சிங்கை இறை அடியே(5) இலையே-இருக்கும் என முரணணி இந்தப் பாடலில் உள்ளது. சொல் பொருட் பின் வருநிலை அணிக்கு இரண்டு பாடல்கள் எடுத்துக்காட்டாகக் காணலாம்(66,33). குன்றம் வளரும் குறிஞ்சிக்கிழவ! முன்கொல்லவரும் குன்றம் உரித்த பெருமான்குமர! குறத்திஅரைக்கு உன்றன் உளத்தைக் கொடுத்தவனே! உலகோர் பவங்கள் குன்றவரும் சிங்கைக் கோவே! அசுரரைக் கொன்றவனே! இந்தப்பாடலில் குன்றம் என்னும் சொல் மலை,புலி, குறைதல் என்ற பொருளில் வந்துள்ளது. 66-வது பாடலில் முகம் ஆறு உடையன், முகமாறு உடையான்(விநாயகன்), பகம் மாறுடையன்(சிவபெருமான்)(பாகம் மாறுபட்டவன்), ஞாபகமாறுடைய பரன்(முருகன்) எனச் சொல் விளையாட்டு வருவதையும் காணலாம். புராணம் எனப்படும் தொன்மச் செய்திகளை இலக்கியங்களில் தருவது மரபு. ஒரு பாடல் கந்தபுராணக் கருத்தைப் பற்றிப் பேசுகிறது. காரணம் கற்பனை யாவும் கடந்த கருணை வள்ளல் ஆரணம் கேட்டு அயன் ஆணவம் போக்கி அசுரமன்னன் வாரணம் கொண்ட கொடியாய்! மரகத மாமயிலின் பேரணங்காய்! கதி தந்தருள்வாய் சிங்கைப் பேரரசே! (31) இப்பாடலில் பிரமனிடம் ஓம் என்னும் மந்திரப்பொருளை முருகன் கேட்ட செய்தியும், சூரனை வென்று கோழ¢க்கொடியும் மயிலூர்தியும் பெற்ற செய்திகளும் தரப்பட்டுள்ளன. இவ்வாறே இன்னொரு பாடலில் (31) கவுச¢கன், நகுடன், குலிசன் போன்றோர் பற்றிய புராணக்கதைக் குறிப்புள்ளது. சில பாடல்களில் வரும் எதுகை ஓசைகள்-சேவடி, பாவடி, புனுவடி, தாவடி என்பனவும், இறையடிப்பட்டு, கறையடிப்பட்டு, மறையடிப்பட்டு, சிறையடிப்பட்டு என்பனவும் கந்தரலங்காரப் பாடல் செல்வாக்கையும் கோமளம் மவிய- சாமளமேவிய-மாமளமேவிய-சீமளமேவிய என்பவை அபிராமி அந்தாதிப் பாடல் செல்வாக்கயும் உணர்த்தக் காணலாம். நூல் காட்டும் சமூகம் சிங்கை நகர் அந்தாதி முருகனைப் பற்றி இயற்றப்பட்ட ஒரு பக்தி நூல். எனவே சிங்கப்புனுரில் அன்றிருந்த சமூகத்தைப் படம் பிடித்துக்காட்ட அதிகம் வாய்ப்பில்லை. எனினும் செய்யுள்களைப் படித்துப் பார்க்கும்போது அக்காலச் சமுதாயம் பற்றிய சில செய்திகளை அறிய முடிகிறது. பழிப்பார் மறை, மனம் வைப்பார் பரத்தையர் பல்கலையில், கழிப்பார் பொழுதைக், கருதார் நினது அடி, கள்கடைக்கண் விழிப்பார், விபுனுதி தரியார், விமலன் விதியை எல்லாம் அழிப்பார், வளஞ்சிங்கை வேலா! உனை அறியாதவரே (9) என்னும் பாடலில் அக்காலத்தமிழ் மக்கள் சிலர் பக்தி செலுத்தாது கள் குடித்தலிலும், பரத்தையரிடம் செல்வதிலும், அவர்கள் காட்டும் கலைகளில் பொழுதைக் கழிப்பதிலும் நாட்டம் உடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என ஊகிக்க முடிகிறது. மேலும் அக்காலத்தில் பரத்தையர் ஆடவரை மயக்கித் தீய வழியில் செலுத்திய செய்தியைப் பல பாடல்களில் ஆசிரியர் தம் அனுபவம் போலக் குறிப்பிட்டும் செல்கிறார். இன்னொரு பாடலில் (90)' சாதியும் மார்க்கச் சடங்குகளும் தினகரன் முன்பனி போல் சிங்கை வேல சிதறுதியே ' என்று ஆசிரியர் வேண்டுகோள் விடுப்பதால் அக்காலத்தில் சாதியும், சமயமும் காட்டும் வேறுப¡டு மிகுதியாகச் சமுதாயத்தில் இருந்திருப்பதையும் நாம் ஊகிக்க முடிகிறது. 'பயமே பொருந்திப் பதைக்கும் நெஞ்சே 'என விளித்துச் சிங்கை வேலன் திருவடியே அபயம் எனக் கூறும் பண்டிதர் பாடல்(8)_ அக்காலத்துக் குடியேற்றச் சமூகம் நிலைபேறு இல்லாது துன்பப்பட்ட சூழலையும் இறைவன் த¢ருவடியை வேண்டிய நிலையையும் காட்ட முற்படுகிறது. சித்திரகவி சித்திரக்கவி என்பது நான்கு வகைக் கவிகளுள் சித்திரத்தில் அமைத்தற்கேற்பப் பாடப்படும் கவிதைகள், செய்யுட்களாகும். (நான்கு வகைக் கவிகளாவன வருமாறு- 1. ஆசுகவி என்பது பொருள், அடி, பா, அணி முதலியன கொடுத்து பாடுக என்றதும் உடன் பாடுவது. 2. மதுரகவி என்பது சொல், பொருள், ஓசை நயம் தோன்ற இன¢மையாகப் பாடுவது. 3. வித்தாரக்கவி என்பது ஒரு பொருள் பற்றி விரிவாகப் பாடுவது. 4. சித்திரக்கவ¢ என்பது மாலைமாற்று முதலிய அருங்கவிதைகளைப் பட வடிவில் அமைத்துப் பாடுவது). இவை யாப்பமைதியும் பொருளமைதியும் ஒருங்கே பெற்றுப் பட வடிவில் பொருந்திக் கற்றோரை வியப்படையச் செய்யும் தன்ம உடையவை. இவற்றை இயற்றுவது அருமை. நல்ல மொழிப் புலமையும் கலை நோக்கும் கொண்டவர்களே இவற்ற இயற்ற முடியும். தமிழ்ப் புலமைக்கு இவை மணிமுடியாக அமைபவை. கலை உணர்வும் கற்பனைத் திறமும் கவிப்புலமையும் ஒருங்கே பெற்று அமைவது சித்திரக்கவி. கட்டுக்கோப்பான எண்ணமும், கவர்ச்சியும், கருத்துப் புலப்பாடும் தோன்றச் செய்வதே இதன் தனிச்சிறப்பு. இக்கவிகள் ஒவ்வொன்றிலும் கணித நுண்மைகள் அடங்கி இருக்கின்றன. கவிஞன் தான் இயற்றிய கவிதையில், பிறர்க்கும் புலனாகாத சித்திரவடிவைப் புலன¡க்கியும், அவையே அழகாக - அணியாக அலங்காரமாகிப் பார்த்தார்க்கு இன்பம் பயக்கும் வகையிலும் அமப்பதே சித்திரகவி. பொதுவாக மனித எண்ணங்கள், புதுமைப்போக்கு, விடுகதை, விளையாட்டு அமைப்பு இவற்றுடன் கவிதையிலுள்ள அருமைகளைப் பிறர்க்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் ஆவல் போன்றவற்றின் காரணமாகத் தோன்றியவை தாம் சித்திரகவிகள். கி.பி. ஏழாம் நூற்றாண்டினரான திருஞானசம்பந்தரே சித்திரகவிகளைத் தமிழ் இலக்கிய உலகிற்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர். கி.பி.9ஆம் நூற்றாண்டிற்குப் பின் நிகண்டுகளும் , யாப்பு, அணி, பாட்டியல் போன்ற இலக்கண நூல்களும் சித்திர கவிகளின் வகைகளைப் பற்றிப் பேசுகின்றன. தண்டியலங்காரம் என்னும் அணி இலக்கண நூல் கவ¢தைக்குரிய அணிகளைச் சொல்லணி, பொருளணி என இருவகைப்படுத்திச் சித்திரக்கவிகளைச் சொல்லணிகளுக்குள் அடக்கிக் காட்டுகிறது. சொல்லணி மடக்கு, சித்திரகவி என இருவகைப்படும். எழுத்துகளது தொகுதி பிற எழுத்தாலும் சொல்லாலும் இடையிடாதும் இடையிட்டும் வந்து பெயர்த்தும் வேறு பொருளை வ¢ளைப்பது மடக்கு அணி ஆகும். சொல்லணியில் சொல்லமைப்பே சிறப்பிடம் பெறுகிறது. பெரும்பாலும் சாற்களை எழுத்தெழுத்தாகப் பிரித்தும், கூட்டியும் படித்துப் பொருள் கொள்ளும் நிலையில் முன்பின் மாறிநிற்கும் இயல்பை இங்குக் காணலாம். ஒரு வகையில் சொற்பிரித்துக் கூட்டும் விளையாட்டுகள் எனவும், குறுக்கெழுத்துப் போட்டி போல அமைக்கப்பட்ட ஒரு சொல் விளையாட்டு என்றும் சித்திரக்கவிகளைக் கூறலாம். எனவே சித்திரகவிகளைப் படைப்பது அருமை. அதனை விட அவற்றைப் படித்துப் பொருள் அறிவது என்பது அருமையிலும் அருமை. உரை இல்லாமல் புரிந்து கொள்ள முடியாது. சித்திர கவிகளைப் பாடிய புலவர்களைக் கடந்த 300 ஆண்டுகளாக அறிய முடிகிறது. பெரும்பாலும் கடவுளர் மீதும் வள்ளல்கள் மூதும் பாடப்பெற்றன. (வே. மாதவன், சித்திர கவிகள்) சித்திர கவிகள் படவடிவில் பாடப்படுபவை ஒரு வகை, குறிப்பிட்ட ஒரு யாப்பில் அமையும் ஒரே பாடலைப் பல்வேறு சந்தங்களுடன் பலவகை யாப்புகளில் அமைத்துக் காட்டுவதும் மற்றொரு வகை. இந்த இருவகைச் சித்திர கவிகள் இயற்றுவதிலும் வல்லவர் சதாசிவ பண்டிதர் என்பதை அவர் சிங்கப்புனுர்ச் சுப்பிரமணிய சுவாமி பேரில் பாடிய சித்திர கவிகள் என்னும் நூல் நமக்கு உணர்த்துகிறது. இந்நூலில் பின்வரும் சித்திரகவிகள் இடம்பெற்றுள்ளன. 1. மாலை மாற்று வெண்பா- மாலை என்பது புனுக்களால் வரிசையாகத் தொடுக்கப்படுவது. அம்மாலைக்கு அமைந்த இரண்டு தலைப்புகளில் எதனை முதல¡கக் கொண்டு நோக்கினும் அம்மாலை ஒரே தன்மை உடையதாய்த் தோன்றுமாறு போல, ஒரு பாடலை முதலிலிருந்து நோக்கினாலும் முடிவிலிருந்து நோக்கினாலும் அதை பாடலாக அமையும்படி எழுத்துகளை நிரல அமைத்துப் பாடுவது மாலைமாற்று (விகடகவி என்னும் சொல்லைப் போலச்) செய்யுள் அமைவது. 2. அஷ்ட நாக வெண்பா- ஒரு சதுரத்தின் நான்கு பக்கத்தின் புறத்திலும் இரண்டு இரண்டு பாம்புகளின் தலைகள் பொருந்த நான்கு கோணங்களிலும் காணம் ஒன்றில் இவ்விரண்டு வால்கள் பொருந்த எட்டுப் பாம்புகள் பின்னிக்கிடப்பச் சித்திரம் வரைந்து எடுத்துக்கொண்ட கணக்கின்படி எழுத்துகள் நிற்பக்கவி அமைப்பது. 3. துவிநாக விருத்தம்- இரண்டு பாம்புகள் பின்னிப் புணர்ந்து விளையாடுவதைப் போலச் சித்திரத்தில் பொருந்தச் செய்யுள் அமைத்துப் பாடுவது. 4. இரத வெண்பா- தேர்போலச் சித்திரம் தீட்டி அதனுள் செய்யுள் அமைப்பது. 5. கமல வெண்பா- ஒரு தாமரையைப் பே¡லச் சித்திரம் தீட்டிச் செய்யுள் அமைப்பது 6. சதுரங்க வெண்பா- பக்கத்திற்கு எட்டுக் கட்டங்கள் அமைத்து அறுபத்து நான்கு கட்டங்கள் அடங்கிய சதுரங்கச் சித்திரத்தில் எழுத்துகள் அமைத்துச் செய்யுள் இயற்றுவது. 7. துவி வெண்பா- நேரிசை வெண்பா ஒன்றினையே சீர்களை மாற்றி அமைக்க வேறொரு நேரிசை வெண்பாவாக வருமாறு அமைப்பது. 8. நிரல் நிரைக் கட்டளைக் கலித்துற-வரிசையாகப் பொருள்களை அடுக்கிப் பாடுவது. 9. திரி வெண்பா-நேரிசை வெண்பா ஒன்றினையே சீர்களை மாற்றி அமைக்க மூன்று நேரிசை வெண்பா வருமாறு அமைப்பது. 10. கரந்துறை வெண்பா- ஒரு வகை வெண்ப¡விற்குள் இன்னொரு வகை வெண்பா மறைந்து வருமாறு அமைப்பது. 11. தனு வெண்பா ? 12. வினாவிடை வெண்பா- கேள்வியும் பதிலுமாக வர அமைப்பது. 13. கட்டளைக்கலித்துறை இருபா-ஒருவகப் பாவினுள்ளே இன்னொரு வகைப்பா அமையுமாறு இயற்றுவது. கட்டளைக் கலித்துறைப் பாடலுக்குளேளேயே நேரிசை வெண்பா அமையப் பாடியுள்ளார். 14. அடி நினைந்து இரங்கல் என்னும் துறையுள் கட்டளைக் கலித்துறையினுள்ளே மோனைபிறழாத நேரி.சை ஆரியப்பா அமையுமாறு இயற்றியுள்ளார்,.இவை இரண்டும் இருபா வகையினுள் அடங்கும். 15. நடுஎழுத்து அலங்காரம் - ஒரு பாடலில் உள்ள சொற்கள் ஒவ்வொன்றுக்கும் மூன்றெழுத்தாகவே பொருள் வருவித்து, உரையில் நின்ற நடுஎழுத்தெல்லாம் சேர்ந்து பாட்டுடைத் தலைவன் பெயரமையுமாறு பாடுவது 16. திரிபங்கி- ஒரே பாடலை ஒரே ப¡டலாகவும் காட்டுவதுடன் மூன்று பாடல்களாகவும் அமையுமாறு இயற்றுவது யாதேனும் ஒரு செய்யுளாய் நின்றே ஒரு பொருள் பயப்பதன்றி, அதுவே மூன்று செய்யுளாய்ப் பிரிந்து முடிந்து வெவ்வேறு பொருள் தருமாறு பாடப்படுவது. 17. ஒரு சீர் மடக்கு- எழுத்துகளது தொகுதி பிற எழுத்தானும் சொல்லானும் இடையிடாதும் இடையிட்டும் வந்து பெயர்த்தும் வேறு பொருளைத் தருவது மடக்கு என்னும் அணி. இது சொல்லணி. அதாவது ஒரு சீர் திரும்பவந்து இன்னொரு பொருளைத்தருவது. 18. மடக்கு விருத்தம் ''17 போன்றது" 19. வேலாயுதபந்தம் (மாலை மாற்று)- வேலாயுத ஓவியத்தில் பாடல் அமையுமாறு மாலைமாற்று வகையில் பாடப்படுவது. மேற்கண்ட வகைச் சித்திரக்கவிகளில் அஷ்டநாகபந்தம், துவிநாகபந்தம், இரதபந்தம், வேலாயுதபந்தம், கமலபந்தம், சதுரங்கபந்தம் ஆகிய ஆறுக்கும் படங்கள்-சித்திரங்கள் தரப்பட்டுள்ளன. சித்திரகவிகள் அனைத்தும் சிங்கை முருகப் பெருமான் மீது பாடப்பட்டவை. இப்பாடல்களில் ஒரு பாடலில் மட்டும் 1 (12) சிங்கப்புனுர் என்றும் இன்னொரு பாடலில் (4) சிங்காபுரி என்றும் ஏனைய பாடல்களில் சிங்கை என்றும் வருகின்ற நிலையைக் காண்கிறோம். இவை அனைத்தும் படித்துப் பொருள் காண்பதற்கு அரியனவாகவே தோற்றம் அளிக்கின்றன. தமிழ் இலக்கண இலக்கியப் புலமை உடையோரே படித்து அறியத் தக்கன. புலவர்க்கு அருவிருந்தாக அமைவன. இவற்றை எப்படிப் படிக்க வேண்டும், இவற்றிற்கு என்ன பொருள் என்பனவற்றைத் தெளிவாக இத்துறையில் புலமைமிக்க¡ர் உரை எழுதி உதவினால் பேருதவியாக இருக்கும். சித்திரகவிகள் சில இடங்களில் சொற்களைச் சித்திரவதை செய்த நிலையிலும், சொல் நயம், பொருள் நயம் இன்றி அசைச் சொற்கள் சேர்த்த நிலைய¢லும்., செய்யுள் விகாரங்களைப் புகுத்திய நிலையிலும், வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதிய நிலயிலும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இவை படிப்பவர்க்குப் புரியாத புதிர் போல இருக்கும் இயல்பும் உள்ளது. முடிவுரை 1 தாய்த் தமிழகத்தின் தொன்மையான இலக்கியங்கள் செய்யுள் வடிவிலேயேஉள்ளன. அதைப் போலச் சேய் நாடாகிய சிங்கையிலும் முதலில் தோன்றிய இலக்கியம் கவிதை வடிவிலேய இருப்பதைக் காண்கிறோம். 2 தமிழ் இலக்கிய வரலாற்றை நோக்குவோர் புலவர் இலக்கியம், பொதுமக்கள் இலக்கியம் என இருவகைப்படுத்தித் தொடக்க நிலையிலிருந்து காண்பர். அந்நிலையே சிங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் உள்ளது. சிங்கை நகர் அந்தாதி, சித்திரகவி என்பன புலவர் இலக்கியமாக இருக்க இக்கால கட்டத்தில் 1893-இல் தோன்றிய ந.வ. ரங்கசாமிதாசனின் குதிரைப் பந்தய லாவணி, பொன்னுசாமிப் பிள்ளையின் சல்லாபலாவணி போன்றவை பொதுமக்கள் இலக்கியமாக இருக்கக் காண்கிறோம். 3.குடியேறியதமிழர்களில்பெரும்பாலும்யாழ்ப்ப¡ணத்தவர்களேபடித்தவர்களாத் தொடக்க காலத்தில் இருந்த காரணத்தால் அவர்கள் வழித்தோன்றலான ச¢.ந. சதாசிவ பண்டிதர் முதலில் இலக்கிய நூல்களை இயற்றியுள்ளார் எனலாம். 4. சிங்கை நகர் அந்தாதி, சித்திர கவிகள் என்னும் நூல்கள் யாழ்ப்பாணத்தவரால் இயற்றப்பட்டிருக்க, இதன் பாட்டுடைத் தலைவன் கோயிலை எழுப்பியவர்கள் தாய்த்தமிழகத்தின் தென் பகுதியைச் சேர்ந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் என்பதும் குறிப்ப¢டத்தக்கது. இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் இணைப்பை இந்நூலில் காணலாம். 5.இந்நூலை வெளியிட்ட அச்சு இயந்திர உரிமமையாளர் மகுதூம் சாயபு ஆவார். எனவே சமய நல்லிணக்கம் முதலாம் நூல்களிலேயே இருக்கக் காணலாம். 6.இந்நூல்களில் வரும் பாடல்களையும், பிற குறிப்புகளையும் கொண்டு சிங்கப்புனுர் டேங் ரோட்டில் குடி கெ¡ண்டுள்ள முருகப் பெருமானையே பாட்டுடைத் தலைவனாக இந்நூல் கொண்டுள்ளது எனலாம். 7.இந்நூல்களின் ஆசிரியராகிய சதாசிவ பண்டிதர் சிறந்த தமிழ் இலக்கிய இலக்கணப் புலமையும், தத்துவப் புலமையும் உடைய சைவர் என உணரலாம். 8.இவர் சிங்கைக்கு வந்துதான் இந்நூல்களை இயற்றி இருக்க வேண்டும். 9.சிங்கை நகர் அந்தாதி காப்புப் பகுதியுடன் 100 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைக் கொண்டு விளங்குகிறது. 10.நூல் சிங்கப்புனுரின் சிறப்பை ஒவ்வொரு பாடலிலும் பேசுகின்றது. சிங்கை என்ற சொல்லாட்சி மிகுதியாகவுள்ளது. சிங்காபுரம், சிங்கையுனுர், சிங்கைத்தலம், சிங்கை மாநிலம் என்றும் வருகின்ற நிலை உண்டு. 11.சிங்கை ஒரு தீவு என்றும், இயற்கை வளமிக்கது என்றும், வாணிபம் வளர் நாடு என்றும், செல்வச்சிறப்புடல் பாலியும் நாடு என்றும் வெற்றி, புகழ், பாதுகாப்பு மிக்க நாடு என்றும் அந்தாதி நூல் வாயிலாக அறிகிறோம். 12. அந்தாதியில் முருகப் பெருமான் மரபுவழிச் செய்திகளாலேயே வருணிக்கப்படுகிறான். தமிழ்க்கடவுளாகிய முருகனையே தலைவனாகக் கொண்டுள்ளன அந்தாதியும் சித்திரகவிகளும். 13. தமிழர் கண்ட பக்திச் சுவையைப் பல வகையில் பாடும் பாங்குடையது சிங்கை நகர் அந்தாதி. 14. உணர்ச்சி, கற்பனை, சொல்லாட்.சி, உவமை முதலிய அணிநலம் ஆகிய இலக்கியக் கூறுகளை உடையது சிங்கை நகர் அந்தாதி. 15. சிங்கை நகர் அந்தாதி தமிழர் சமூக நிலையை ஓரளவு காட்டுகிறது. நிலைப்பாடற்ற சமூக நிலை இருப்பதைக் காண முடிகிறது. 16. சித்திரகவிகள் புலமை வெளிப்பாட்டு இலக்கியங்களைக உள்ளன. 17. சித்திரத்துடன் சில பாடல்கள் உள்ளன. 18.சித்திரமல்லாமல் மாலைமாற்று, துவி வெண்பா, திரி வெண்பா முதலிய பாடல்களும் உள்ளன. 19.இவற்றைப் படிப்பதும், படித்துப் பொருளுணர்வதும் அரிதாக உள்ளன. 20. இவற்றைப் பின்பற்றிச் சிங்கையில் சித்திரகவி படைத்தோர் சிங்கப்புனுர்ச் சித்திரகவி நாவலர் சி.வே.நாராயணசாமி நாயகர், சின்னப்பனார். இன்று சிங்கையில் சித்திரகவி படைத்து வருபவர் வண்பாச் சிற்பி இக்குவனம் ஒருவரே. துணை நூல்கள் திருநாவுக்கரசு,வை. தமிழ்க்கவிதை முன்னுரை The Poetry of Singapore, ASEAN Committee on Culture and Information, Singapore 1985. கோவிந்தசாமி,நா. சிங்கப்புனுர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சி-ஒரு சமூகவியற்கண்ணோட்டம், சிங்கப்புனுரில் தமிழும் தமிழிலக்கியமும் ஆய்வரங்க மாநாட்டுக் கட்டுரைகள். சிங்கப்புனுர்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை பக்24-39. 1979. சிங்கப்புனுர் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேக மலர் 1996. செண்பக விநாயகர் ஆலயம் காகும்பாபிஷேக மலர் 1983 Souvenir Publication. Yogini Yogarajah. Ceylon Tamil Hindus: Labelling Maintenance Tamil Peravai Vol 2. 1981/82 National University of Singapore Tamil Language Society p83-104 மாதவன், வே.இரா. சித்திரக்கவிகள் சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1983. புரட்சிதாசன். கன்னித்தமிழ்க் கவிதை பாடுவோம் ,சென்னை, பாண்டியன் பாசறை. 1992. "சிங்கைத் தமிழ் இலக்கிய முன்னோடி" சி.ந. சதாசிவ பண்டிதர் (டாக்டர் சுப. திண்ணப்பன்) 1. முன்னுரை 2. பின்னணி 3. சதாசிவ பண்டிதர் 4. சிங்கை நகர் அந்தாதி 1. நூல் அமைப்பு 2. நூல் தலைவன் 3. நூலில் சிங்கை 4. நூலில் பக்தி 5. நூலில் தத்துவம் 6. நூலில் இலக்கியம் 7. நூலில் சமூகம் 8. சித்திரகவிகள் 9.முடிவுரை










திருமுறைகளில் அம்மை
சுப.திண்ணப்பன்

சிவபெருமானை மூல முதல்வனாகக் கொண்டு செந்தமிழில் பாடப்பெற்ற பக்திப் பாடல்களின் தொகுப்பே திருமுறைகளாகும். சைவ சமயத்தவர்கள் நாள்தோறும் காதலாகிக் கசிந்துருகி வேதம்போல ஓதத் தக்கவை திருமுறைகளாகும். இவை எண்ணிக்கையால் பன்னிரண்டு. இவற்றைப் பாடியவர்கள் 27 அருளாளர்கள்.திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர். சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரப்பாடல்கள் முதல் ஏழு திருமுறைகளாகும். மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாகும். திருமாளிகைத்தேவர், சேந்தனார் முதலிய ஒன்பது ஆசிரியர்களால் இயற்றப்பட்ட திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவை ஒன்பதாம் திருமுறயாகும். திருமூலர் பாடிய திருமந்திரம் பத்தாம் த¢ருமுறையாகும். காரைக்கால் அம்மையார், பட்டினத்தார், சேரமான் பெருமாள் நாயனார் முதலிய பதினோரு பேர் பாடிய பாடல்கள¢ன் தொகுப்பு பதினோராம் திருமுறையாகும். சேக்கிழார் பாடிய பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறை. இந்தத் திருமுறைகளிலுள்ள மொத்தப் பாடல்கள் 18402. திருமுறை ஆசிரியர்கள்
இறைவன் திருவருளைப் பெற்றுப் பேரின்பம் அடைந்தார்கள். இவர்கள் தாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் என்னும் பெரு நோக்கத்துடன் மற்றவர்களும் இப_றவன் திருவருளைப் பெற வழிகாட்டினார்கள். அவர்கள் காட்டிய வழிமுறைகளே
திருமுறைப்பாடல்களாக் மலர்ந்துள்ளன.

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைம¢ன் நமனில்லை" என்று கூறினார் திருமூலர். எனவே இறைவன் ஒருவனே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவன் ஓருருவம், ஒரு நாமம் இல்லாதவன். அவன் ஆணல்லன், பெண்ணல்லன், அலியுமல்லன். எனினும் அவனை அம்மையாகவும் அப்பன¡கவும் கருதி வழிபடுதல் நம் சைவ மரபாகும்.
" அம்மை நீ அப்பன் நீ" என்றும் "ஈன்றாளுமாய் எந்தையுமாய்" என்றும் நாவுக்கரசர் பெருமான் தம் தேவாரத்தில் இறைவனை வர்ணிக்கிறார். திருவாசகமும் " அம்மையே அப்பா ஒப்பிலா மணியே" என்று இறைவனை அழைக்கிறது.

இறைவனாகிய சிவபெருமான் அன்பின் மறுவடிவம். "அன்பே சிவம்" "அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்" என்பன திருமந்திர மொழிகள். இறைவியாகிய உமை அம்மையாரா அருளின் திருவுருவம்.. " அருளது சக்தியாகும் அரன் தனக்கு" என்பது சிவஞான சித்தியார் வாக்கு. அருள் என்பது அன்புத்தாய் பெற்றெடுத்த குழந்தை என்பதை " அருளன்னும் அன்பீன் குழவி" என்னும் வள்ளுவர் வாக்கு வலியுறுத்தும்.

அருள் என்பதைக் கருணை என்றும் அழைப்பர். கருணை அறக்கருணை,
மறக்கருணை என இரு வகைப்படும். கருணையின் வடிவம¡கிய அம்மை
அறக் கருணையாகவும் தோன்றுவாள். மறக் கருணையாகவும் காட்சி
அளிப்பாள். " அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே
துணை" என்னும் குறள் இக்கருத்துக்கு அரண் சர்க்கும்.
அறத்திற்கு ஆதரவு தருவதும் மறத்திற்கு அழிவு தருவதும் சக்தியின் - அம்மையின் இயல்புகளாகும். அதாவது உலகில் நல்லனவற்றை வாழவப்பதும் அல்லனவற்றை வீழவைப்பதும் அவளது செயல்களாகும். நல்லார்க்கு அருள்செய்து காப்பதும். அல்லாரை அடியோடு அழிப்பதும் அவளது பணிகளாகும் இதனை " துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலன" என்று வடமொழியாளர் கூறுவர்.அறக் கருணை வடிவமே உமை அம்மை, மறக்கருணை வடிவமே உருத்திர காளி. அம்மையின் இவ்விரு
வடிவங்களும் திருமுறைகளில் இடம்பெறும் இயல்பை இக்கட்டுரையில்
காண்போம்.

திருமுறையில் உமை அம்மை

திருமுறையின் தொடக்கப் பாடல் “ தோடுடைய செவியன்” எனத் தொ டங்கும் திருஞான சம்பந்தர் தேவாரம் ஆகும். இப்ப¡டல் எழுந்த சூழ்நிலையைப் பார்ப்போம். சீகாழிய¢ல் தந்தையாருடன் நீராடச்சென்ற ஞானசம்பந்தக் குழந்தை தன் தந்தை நீராடும்போது அவரைக் காணாது கலங்கிக் கோயிலைப் பார்த்து”அம்மே அப்பா” என்று அழுதது, இதனைக் கேட்ட சிவபருமான் உமை அம்மையோடு அங்கு எழுந்தருளி உமை அம்மயைப் பார்த்து “துணைமுலைகள் பொழிகின்ற பாலடிசில் பொன் கிண்ணத்து ஊட்டு” எனப் பணித்தருளினார். அதற்கேற்ப உமை அம்மை“ எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி “உண் அடிசில்” எனச் சம்பந்தர்க்கு ஊட்டினார். அந்நிலையில் சம்பந்தர் சிவஞானம், கலைஞானம், மெய்ஞ்ஞானம் முதலியன உணர்ந்து ஞான சம்பந்தர் ஆனார். நீராடிவிட்டுக் கரயேறிய ஞானசம்பந்தரின் தந்தையார்’ யார் அளித்த பாலடிசில் உண்டது நீ” என அரட்டிக் கேட்க அதற்குப் பதில் கூறும் வகையில் எழுந்ததுதான்“ தோடுடைய செவியன்” எனத் தொ டங்கும் பாடல். எனவே திருமுறையின் தொடக்கத்திற்கே உமை அம்மையார்தான் காரணம் என்பதனை இதன் வழி உணரலாம்.

“ தோடுடைய செவியன்” என்னும் தொடரில் தோடு என்பது பெண்கள் காதில் அணியும்
ஓர் அணிகலன். செவியன் என்பது ஆண்பாலை உணர்த்துவது. எனவே “ தோடுடைய செவியன்” என்பது உமாதேவியாரைத் த ன் உடம்பில் ஒரு பாதியாகக் கொண்ட உமையொரு பாகனை உணர்த்தும். உமை அம்மை அருளால் உருவான திருமுறை வாக்கை நினைத்துத்தான் உமையம்மையாரைக் குறிக்கத் தோடு எனத் தொடங்கிப் பாடினார் ஞானசம்பந்தர். எனவே சிவபருமானையே பாடும் திருமுறையின் தொடக்கம்
அவனருட்சக்தியாகிய அம்மையே நோக்கியே அமைந்துள்ளது என்லாம்.

உமையம்மையாரைத் தப_லவியாகக் கொண்டு பாடும் தனி நூல்களோ தனிப் பாடல்களோ
திருமுறைத் தொகுப்பில் இல்லை. எனினும் சிவபெருமானுடன் சார்த்தியே பல இடங்களில் உமை அம்மை பற்றிய செய்திகள் வந்துள்ளன. உமை அம்மையார¢ன் சிறப்பு தேவாரப் பாடல்களில் இலைமறை காயென ஆங்காங்கே ஓதப்பெறுகின்றது.
“ தோடுடைய செவியன்” என உமையெ¡ரு பாகனை ஞானசம்பந்தர்.கூறியது போலவே “நின்கழல்கள் காணப் பாதியோர் பெண்ணை வைத்தாய்” “உமையோடு உடனாகி இருந்தான் தன்னை” என்று நாவுக்கரசரும் கூறுவார். இறைவனின் திருவடி திருவருள் தொழிற்படும் இடம் என்பதையும், அத்திருவடியே அடியவர்க்கு அருள்புரியும் என்பதையும், திருவடியே சக்தியாக உருவகிக்கப்பட்டுள்ளது என்பதையும் இவ்வடிகள் உணர்த்தும். மேலும் சுந்தரர் தம் தேவாரத்திலும் “ ஒரு பாகம் பெண்ணாவார்” என்றும்,
“வண்டாடும் குழலாள் உமைபாகம் மகிழ்ந்தவனே” என்றும் பாடுகிறார்.



சிவபெருமான் பல்வேறு நிலையில் கோயில்கொண்டு விளங்கினாலும் உமைஅம்மையோடு
எழுந்தருளியிருக்கும்பாதே இன்புறுவான் என்னும் கருத்தை ஞானசம்பந்தர் ‘சுத்தமார் பளிங்கின் பெருமலையுடனே சுடர் மரகதம் அடுத்தாற்போல், அத்தனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாயாவதும் இதுவே” “ அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாயாவது இதுவே” என்னும் பாடல் அடிகளால் குறிப்பிடுவர். இதன் விளைவாகத்தான் பிற்காலத்தில் உமையம்மையார்க்குத் தனிக் கோயில்கள் எழுப்பபட்டன.
தேவி வழிபாடு தோற்றம் கண்டது.

சிவபெருமான் பெண்ணின் நல்லாளாகிய உமை அம்மையுடன் பெருந்தகையாக வீற்றிருப்பது ந¡ம் அனைவரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம், வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவிலை என்பதை உணர்த்தத்தான் என உரைக்கிறார் ஞானசம்பந்தர். இல்லற வாழ்வின் ஏற்றத்தையும், வையத்து வாழ்வாங்கு வாழவேண்டியதன் தேவையையும் வலியுறுத்தவே இப்பாடல் எழுந்தது என்பதை நாம் உணர வேண்டும். இறைவன் இறைவியுடன் கூடியிருப்பது ஆண் பெண் இணைந்த இல்லற வாழ்வின் பெருமையை உலகத்தார்க்கு உணர்த்தவே ஆகும். இல்லற வாழ்வில் ஈடுபடுவது வீடு பேற்றுக்கு வழிவகுக்காது என்னும் கருத்தை மறுக்கவே இப்பாடல் எழுந்தது என்பதையும் நாம் நோக்க வேண்டும். ஐயாறு அடைந்த நாவுக்கரசர் மாதர்பிறைக்கண்ணியானை மலையான் மகளொடும் பாடிக் கண்டறியாதன காணும் காட்சியில் இறைவனும் இறைவியுமாகத் தோன்றும் தோற்றமும் இதனை வலியுறுத்தும். திருவாசகத்த¢ல் மாணிக்கவாசகர் "குவளைக்கண்ணிக் கூறன் காண்க, அவளும் தானே உடனே காண்க" என்று கூறுவதையும் நோக்கவேண்டும்.

திருவாசகத்தில் வரும் திருவெம்பாவையின் உட்கருத்து " சக்தியை வியந்தது" என்பர். கன்னிப் பெண்கள் நாடு செழிக்க மழை பெய்யவும், வீடு செழிக்க நல்ல கணவனைப் பெறவுமே திருவெம்பாவ எழுந்தது. உமாதேவியின் அருளையே மழையாக
உருவகித்துப் போற்றும் திருவெம்பாவைப் பாடல் இதோ:

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.

மேகம் உமையம்மையின் நீலநிறம்போல நிறம் பெற்றுத் திகழ்கிறது; உமையம்மையின் இடை போல மின்னுகிறது; அவள் திருவடியில் இருக்கும் சிலம்பொலி போல் இடிமுழக்கம் செய்கிறது; அவளுடைய அழகிய புருவம் போல வான வில்லுடன் திகழ்கிறது. அவளைப் பிரிந்திராத இறைவன் அன்பர்க்கு அருள்பாலிப்பதற்கு முன்னரே அவள் அருள் சுரக்கின்றாள். அந்த அருளைப் போல மழை பொழியவேண்டும்
என்பது இந்தப் பாடலின் கருத்து. உமை அம்மையின் அருளே மழை என்பது இங்கு தெளிவாக விளக்கப்படுகின்றது. உமை அம்மையை "உடையாள்" என இப்பாடல் குறிப்பதன் பொருள் எல்லாவற்றிற்கும் உடையவள்- உரிமையானவள் சக்தி என்பதையும் காட்டுகிறது. திருவெம்பாவை சக்தியை வியக்கும் வண்ணத்தை இப்பாடல் நன்கு படம் பிடிக்கிறது.

இறைவன் திருவடியே சத்தி எனச் சாத்திரங்கள் கூறும். அத்திருவடியின் ஐந்தொழில் ஆற்றலைப் போற்றித் துதிப்பதுதான் திருவெம்பாவையின் இறுதிப்பாடல். படைப்பைத் "தோற்றமாம் பொற்பாதம்" என்றும், காப்பைப் "போகமாம் பூங்கழல்கள்" என்றும், அழிப்பை "ஈறாம் இணையடிகள்" என்றும், மறைப்பை "மால் நான்முகனும் காணாத புண்டரிகம்" என்றும், அருளலை "அருளும் பொன்மலர்கள்" என்றும் இப்பாடலில் மாணிக்கவாசகர் கூறிப் போற்றுகிறார். இத்திருவடிகளே அப_னத்தின் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் காரணமாக இருப்பவை என்றும் கூறுகிறார். ஐந்தொழில் இல்லையென்றால் உயிர்கள் பாசம் நீங்கி வீடு பெறுமாறு இல்லை அல்லவா?

அம்மை அப்பரின் திருக்கோலத்தைத்

தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்து ஊதாய் கோத்தும்பி

எனவும் திருவாசகம் விவரிக்கிறது.

"உடையாள் உன்றன் நடுவிருக்கும், உடையாள் நடுவுள் நீ இருத்தி, அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்" என்னும் திருவாசகப்பாடல் அம்மை அனைத்தும் உடையவள்
என்பதையும், அவள் இறைவனுடன் கலந்திருப்பாள் என்பதையும்,அந்நிலையில் அவர்கள் இருவரும் மணிவாசகர் அகத்தில் இருப்பர் என்பதையும் சுட்டுகிறது.

ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா ஒன்று 'அரிவையே¡ர் கூறுகந்தான்' என்று அம்மையப்பரைப் போற்றுகிறது. திருப்பல்லாண்டில் ' அன்ன நடைமடவாள் உமைகோன்'
என்னும் தொடர் அம்மையின் நடை அழகைச் சுட்டுகிறது.

பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தில் திருமூலர் தம் வரலாறு கூறுமிடத்துச்

" சேர்ந்திருந்தேன் சிவமங்கைதன் பங்கனை" என்றும்,
"நேரிழையாள் நிரதிசயானந்தப்
பேருடையாள் என் பிறப்பறுத்து ஆண்டவள்
சீருடையாள் சிவன் ஆவடுதண்துறை
சீருடையாள் பதம் சேர்ந்து இருந்தேனே"

என்றும் அம்மை தம்மை ஆண்டருள¢ய செய்தியைக் குறிப்பிடுகிறார். மேலும் திருமூலர்
திருமந்திரத்தில் சக்திபேதம், சக்தியின் பல்வேறு வடிவங்கள், சக்தி எந்திரம், சக்தியை
வழிபடும் எந்திர வழிபாட்டு முறை இவை பற்றி எல்லாம் விரிவாகக் கூறுகிறார். திருமூலர் கூறும் சக்த¢ சிவ சக்தியே ஆகும்.



"தான் எங்குளன் அங்குளள் தையல் மாதேவி" (1031)
" மணங்கமழ் பூங்குழல் மங்கையும் தானும்
புணர்ந்துடனே நிற்கும்" (1019)
"நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி "(1042)
"இருளது சத்தி, ஒளியதுஎம் அண்ணல்" (1095)

என்னும் திருமந்திரத்தொடர்கள் இதனை வலியுறுத்தும்

திருமந்திரத்தில் நான்காம் தந்திரத்திலுள்ள சத்திபேதம்- திரிபுரை சக்கரம்
என்னும் பகுதியிலுள்ள முப்பது திருமந்திரப் பாடல்களும் அம்மன் பெருமையை
விரித்துரைக்கின்றன. கலைமகள் சிவசக்தி என்பதை

ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும் வெண்டாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னிவாய்த் தோத்திரமே (1068)

என்னும் பாடல் வாயிலாகக் கூறுகிறார் திருமூலர். மேலும் சத்தியின் வடிவம் சிவவடிவமே என்பதைச் " சூடும் இளம்பிறை, சூலி, கபாலினி" என்றும், சக்தியின் மந்திரம் சிவமந்திரமே என்பதை "நாம நமசிவ "(1189) என்றும் கூறுவர். மேலும்

அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்றில்லை
அவளன்றி ஊர்புகும் ஆறு அறியேனே (1029)

என்றும் அம்மையின் பெருமையை அவர் கூறுகிறார்.

சத்தி என்பாள் ஒருசாதகப் பெண்ப¢ள்ளை
முத்திக்கு நாயகி என்பது அறிகிலர்.

என்னும் அடிகள் முத்தி அளிக்கும் தன்மை சக்திக்கு உண்டு என்பதைக் கூறும்.
திருமுறைகளீல் திருமந்திரத்தில் தான் சிவசக்தியின் சிறப்பு பலவாறாகக் கூறப்பட்டுள்ளது.

பதினோராம் திருமுறையில் திருமுருகாற்றுப்படையில் முருகன் உமையவள் மைந்தனாகக்
குறிப்பிடப்படுகிறான். சேரமான் பெருமாள் நாயனார் பான்வண்ணத்தந்தாதியில்
அம்மையப்பர் திருவுருவம் பேசப்படுகின்றது. இவரைப் பின்பற்றிப் பட்டினத்தார் திருக்கழுமல மும்மணிக்கோவையில் அம்மையப்பர் வடிவை 61 அடிகளில் விரிவாக விளக்குகிறார். இவரே கோயில் நான்மணிமாலையில் அம்மையப்பர் திருவுருவம் பற்றி

"ஒருபால் தோடும் ஒருபால் குழயும்
இருபாற்பட்ட மேனி எந்தை"

என்னும் அடிகளீல் சுருக்கமாகவும் குறிப்ப¢டுகிறார். திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில்(16)
'வருமுலை தாங்கும் திருமார்பு வல்லி
வையம் ஏழும் பன்முறை ஈன்ற
ஐய திருவயிற்றம்மைப் பிராட்டி
மறப்பருஞ் செய்கை அறப்பெருஞ் செல்வி
எமையாளுடைய உமையாள் நங்கை
கடவுட் கற்பின் மடவரல் கொழுந'

என்று ஏழு உலகும் ஈன்ற தாயாகவும், அறம் வளர்த்த நாயகியாகவும் உமை
அம்மையைப் பட்டினத்தார் குறிப்பிடுகிறார். மேலும் காஞ்சியில் உமையம்மையார் இறைவனைப் பூசித்தபோது, ஆற்றில் வெள்ளம் மிகுந்து வர, உமைஅம்மையார் துடித்துச் சிவலிங்கத் திருமேனியைத் தழுவ, அதில் நகில் சுவடும், வளைச் சுவடும்
பதிந்தன என்று திருவேகம்பமுடையார் திருவந்தாதியில் அவர் கூறுகிறார்.
காஞ்சியில் அம்மை 32 அறங்களை வளர்த்தது பற்றியும் பேசுகிறார்.
சக்தி வேலத் தடக்கையில் உடையவன் முருகன் என்னும் குறிப்பு
ந்ம்பியாண்டார் நம்பியின் பாடல் ஒன்றில் வருகிறது. காரைக்கால்
அம்மையாரும் அம்மையப்பர் திருக்கோலம் பற்றிப் பேசுகிறார்.

பன்னிரண்டாம் திருமுறையாகிய சேக்கிழாரின் பெரிய புராண்த்தில்
உமை அம்மையாரின் சிறப்பு பல இடங்களில் குறிக்கபடுகின்றது.
நாயன்மார்களாகிய அடியார்களுக்குக் காட்சி கொடுக்கும்போது
உமை அம்மையுடன் சிவபெருமான் தோன்றி அருளியதாகச் சேக்கிழார்
பல இடங்களில் சுட்டுகிறார். சிறுத்தொண்ட நாயனார்க்கு இறைவன், இறைவி, முருகனுடன் காட்சி கொடுத்ததைச் ச¡ன்றாகக் கூறலாம். தென்னாட்டின்
சிறப்பைக் கூறும் சேக்கிழார்

எம்பிராட்டி இவ்வேழுலகு ஈன்றவள்
தம்பிரானைத் தனித்தவத்தால் எய்திக்
கம்பையாற்றில் வழிபடு காஞ்சி என்று
உம்பர் போற்றும் பதியும் உடையது

என்று காஞ்சி காமாட்சி அம்மையைச் சிற்ப்பித்துப் போற்றுகிறார். இறைவனை
வழிபட்டுக் கம்பையாற்றில் வெள்ளம் வரத் தழுவிடக் குழைந்த இறைவன்
வரலாற்றைத் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் சேக்கிழார் விரித்துப்பாடும் திறமும் போற்றுதற்குரியது.


"எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மையாவது பூசனை என உரைத்தருள
அண்ணலார்தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணின் நல்லவளாயின பெருந்தவக்கொழுந்து"

என்று இறைவி சிவனைப் பூசை செய்த சிறப்பை அவர் பாடுகிறார். மேலும்


கரந்தரும் பயன் இது என உணர்ந்து கம்பன் மேவிய உம்பர்பால்
நிரந்த காதல் செய் உள்ளத்தளாகி நீடு நன்மகள் யாவையும் பெருக
வரந்தரும் பொருளாம் மலைவல்லி மாறிலாவகை மலர்ந்த பேரன்பால்
சிரம்பணிந்து எழுபூசை நாள்தோறும் திருவுளம் கொளப்பெருகியதன்றே.

என்றும் அவர் விவரிக்கிறார். உமைஅம்மைதான் இறைவனுக்கு முதலில் பூசை
செய்தவர் என்பதை இங்கு உணர முடிகிறது.

காவிரி யாற்றின் பெருமையைக் கூறும் சேக்கிழார்

வண்ண நீள்வரை தரவந்த மேன்மையால்
எண்ணில் பேரறங்களும் வளர்க்கும் ஈகையால்
அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி
உண்ணெகிழ்க் கருணையின் ஒழுக்கம் போன்றது

என்கிறார். காவிரியும் குடகு மலை தந்த ஆறு, உமை அம்மையும் இமவான் மலை தந்த சல்வி; காவிரியும் உமை அம்மையும் உலகில் பல அறங்கள் தழைக்க உதவும் பான்மையும் ஒப்புவமையாக வருகின்றது. அம்மை அருள் சக்தி என்பதை இறுதி அடி எடுத்து இயம்புகிறது.

சிதம்பரத்தில் நடராசப்பெருமான் சிவகாமி அம்மையை நோக்கிக் கூத்தாடும் திறத்தினை
"மாதொரு பாகம் நோக்க¢ மன்னு சிற்றம்பலத்தே
ஆதியும் முடிவும் இல்லா அற்புதக் கூத்தாடும்
நாதனார்"
என்று திருநீலகண்ட நாயனார் புராணத்தில் சேக்கிழார் கூறுகிறார்.
எனவே தான் அது ஆனந்தக்கூத்தாக அமைந்தது போலும்.

திருநாவுக்கரசர் திருவையாற்றில் கண்ட கயிலைக் காட்ச¢யைச் சக்கிழார்

வெள்ளி வெற்பின்மேல் மரகதக்கொடியுடன் விளங்கும்
தெள்ளு பேரொளிப்பவளவெற்பென இடப்பாகம்
கொள்ளும் மலையாளுடன் கூட வீற்றிருந்த
வள்ளலாரை முன்கண்டனர் வாக்கின் மன்னனார்

என்று மரகதவல்லியாக உமைஅம்மையார் சிவனுடன் கயிலை மலைமேல்
இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

இதுகாறும் கூறிய செய்திகளால் அறக்கருணை வடிவாகிய உமைஅம்மையார்
திருமுறையின் தொடக்கப் பாடல் தோன்றுவதற்குத் துணையாக இருந்ததையும்,
திருமுறைப்பாடல்களில் சிவபெருமானுடன் சார்த்தியே உமையொருபாகன் என்ற நிலையில் பல இடங்களில் கூறப்பட்டிருப்பதையும், நாம் மண்ணில் நல்ல வண்ணம் வாழப் பெண்ணின் நல்லாராகச் சிவனுடன்கூடி இருப்பது பற்றிய குறிப்பினையும்,
திருவாசகத்தில் திருவெம்பாவை வாயிலாகச் சக்தியாய் நின்று வியக்கப்படுவது பற்றியும்,
திருமந்திரத்தில் சக்தி பேதம், சக்தியின் பல்வேறு வடிவங்கள், சக்தி எந்திரம், சக்தியை வழிபடும் எந்திர வழிபாட்டுமுறை இவை விரிவாக விளக்கம் பெற்றிருப்பதையும்,
பதினோராம், பன்னிரண்டாம் திருமுறைகளில் காஞ்சியில் சிவபூசை செய்து அறம்
வளர்த்த நாயகியாக அமைந்த வரலாறு விரிவாகக் கூறப்பட்டிருப்பதையும்
தெரிந்துகொண்டோம்.

திருமுறையில் உருத்திரகாளி

அம்மை உலக நன்மைக்காக நல்லோரை வாழ வைக்கும்போது உவகை கொள்ளுகிறாள். தீயோரை அழிக்கும்போது கடுஞ்சினம் கொள்ளுகிறாள்.
இவ்வாறு சினம்கொண்ட அம்மையின் கோலத்தைத்தான் நாம் உருத்திர
காளி என்கிறோம். உருத்திரம் என்றால் கோபம், சினம், வெகுளி என்று பொருள்.
காளி என்ற சொல் கருமை என்ற பொருளையுடைய காளம் என்ற சொல்லிலிருந்து
தோன்றியதாகும். கருமை நிறமுடையவள் காளி என்று அழைக்கப்பட்டாள்.

தாருகாசுரனால் துன்பமடைந்த தேவர்கள், பெண்களுருக்கொண்டு சிவபெருமானை
அடைந்து தமது குறைகளைக் கூறினர். பெண்ணாலன்றி வேறு எவராலும் இறவாத
வரம் பெற்றிருந்தான் தாருகன். அவனை வென்று வரும¡று சிவபெருமான் சக்திக்குக் கட்டளை இட்டார். அப்போது தேவியின் ஒருகலை சிவனின் விஷக்கறை படிந்து
கனற்கண்ணில் பிறந்து வெளிப்பட்டது. அவ்வுரு காளமாகிய விஷக்கறை படிந்து
வந்ததால் காளி எனப் பெயர் பெற்றது. இவ்வகையில் தோன்றிய காளி தன் கோபத் தீயால் தாருகனை